பிந்திய செய்திகள்

ஆயிரம் பயணிகளுடன் பயணித்த ரயில் மீது தாக்குதல்

நேற்று (திங்கட்கிழமை) தலைநகர் அபுஜாவிலிருந்து வடக்கு நைஜீரிய நகரத்திற்குச் சென்ற பயணிகள் ரயிலில் இருந்தே இவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். தாக்குதல் நடந்தபோது கடுனாவுக்கு சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் ரயில் நிறுத்தப்பட்டது,

ஆயுததாரிகள் குழு அபுஜா மற்றும் கடுனா நகருக்கு இடையே தண்டவாளத்தை வெட்டி, ரயிலை கட்டாயப்படுத்தி நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் இருந்த சுமார் 1,000 பயணிகளில் பலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் தஞ்சம் அடைந்தனர். துப்பாக்கிதாரிகள் ரயிலில் ஏறியதில் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பாதுகாப்பு படையினர் தலையிட்டு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களில் ரயில் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

கடந்த சனிக்கிழமை கடுனாவின் சர்வதேச விமான நிலையத்தைத் தாக்கிய ஆயுததாரிகள் குழுவின் சம்பவத்தை தொடர்ந்து இது பதிவாகியுளளது.

இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. ‘பயங்கரவாதிகளிடம் சிக்கிய அபுஜாவிலிருந்து கடுனா செல்லும் ரயிலை ராணுவம் பாதுகாத்துள்ளது’ என்று கடுனா மாநில அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts