பிந்திய செய்திகள்

தாய்வானில் பதிவான நிலநடுக்கம்!

நேற்று இரவு 11.36 மணியளவில் ஹெங்சுன் நகருக்கு தென்கிழக்கே 44 கிலோமீட்டர் தொலைவில் தாய்வான் கடற்கரை அருகே 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

தாய்வான் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் ‘நெருப்பு வளையம்’ (Ring of Fire) எனப்படும் நில அதிர்வுச் செயலில் உள்ள மண்டலத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts