பிந்திய செய்திகள்

இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயாரான உலக வங்கி

வொஷிங்டனில் உலக வங்கியின் துணைத் தலைவர் Hartwig Schafer உடன் நிதியமைச்சர் அலி சப்ரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உலக வங்கியின் துணைத் தலைவர் இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்க உலக வங்கி தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்

இந்த விடயம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சியை ஆதரிப்பதற்கும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்து இதன்போது விவாதித்ததாக அவர் கூறினார்.

ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான நெருக்கடியின் தாக்கம் குறித்து உலக வங்கி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பொருட்கள், ஊட்டச்சத்து மற்றும் கல்விக்கு அவசர உதவியை வழங்க தயாராக உள்ளது என்று உலக வங்கியின் துணைத் தலைவர் Hartwig Schafer கூறினார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts