Home விளையாட்டு பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வென்ற நியூசிலாந்து

பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வென்ற நியூசிலாந்து

0
பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வென்ற நியூசிலாந்து

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றது.

இந்நிலையில். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் சேர்த்தது. கேப்டன் மிதாலி ராஜ் 66 ரன்னும், ரிச்சா கோஸ் 65 ரன்னும் எடுத்தனர். தொடக்க வீராங்கனை மேக்னா 49 ரன்னில் அவுட்டானார்.

271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. முதலில் விக்கெட்டுகளை இழந்தாலும், எமிலியா கெர் தாக்குப்பிடித்து அசத்தினார். அவர் சதமடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், நியூசிலாந்து அணி 49 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

சதமடித்ததுடன், வெற்றிக்கு உதவிய எமிலியா கெர் ஆட்டநாயகி விருதை பெற்றார். இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here