Home சினிமா பிரபல நடிகரின் மகன் மற்றும் பேரனை வாழ்த்திய சூர்யா – ஜோதிகா

பிரபல நடிகரின் மகன் மற்றும் பேரனை வாழ்த்திய சூர்யா – ஜோதிகா

0
பிரபல நடிகரின் மகன் மற்றும் பேரனை வாழ்த்திய சூர்யா – ஜோதிகா

நடிகர் அருண் விஜய் தற்போது ‘ஓ மை டாக்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஷரோவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ளார்.

இதில் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார் மற்றும் அவரது மகன் அர்னவ் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. செல்லப்பிராணியான நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் ஓ மை டாக் படத்தில் அறிமுகமாகியுள்ள அருண் விஜய் மகன் ஆர்னவ் விஜய்க்கு சூர்யாவும், ஜோதிகாவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பட வெளியீட்டையொட்டி தனது செல்லப்பிராணிகளுடன் இதனை பகிர்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here