பிந்திய செய்திகள்

இதற்காகத்தான் 7அல்லது 9ஆம் மாதத்தில் வளைகாப்பு செய்கிறார்கள்?

வளைகாப்பு விழாவானது கர்ப்பிணி பெண்களுக்காக கொண்டாடப்படும் விழாவாகும்.முதல்முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு 5ஆம் மாதம், 7ஆம் மாதம், 9ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் வளைகாப்பு நிகழ்த்தப்படுகிறது. வளர்பிறையில் நாள் பார்த்து, அதிகாலையில் தட்டுகளில் வளையல்கள், பூ மற்றும் மங்கள பொருட்களை வைத்து பின் கருவுற்ற பெண்ணை நாற்காலியில் அமர வைப்பார்கள். பெண்ணிற்கு வளையல் அணிவிக்கும் முன் வேப்பிலையில் காப்புப் போல் செய்து முதலில் கைகளில் போடுவார்கள்.

Our Pollachi Clan: Purnima's Seemandam

பின்பு பெண்ணின் கூந்தலுக்கு மல்லிகை அல்லது முல்லை பூ சூடுவார்கள். பின் ஒவ்வொரு பெண்ணாக வந்து கருவுற்ற பெண்ணுக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு, வளையல் அணிவித்து மலர் தூவி வாழ்த்துவார்கள். திருமணம் ஆகி கருவுறதா பெண் ஒருத்திக்கு துணை காப்பு போடுவார்கள். பெண்ணின் ஒரு கையில் இரட்டை படையிலும், மற்றொரு கையில் ஒற்றை படையிலும் வளையல் அணிவிப்பர். இறுதியாக அனைவருக்கும் ஐந்து வகையான சாதம் பரிமாறுவார்கள். இது வளைகாப்பு செய்யும் சம்பிரதாயம் ஆகும்.

கருவுற்ற பெண் எந்தவொரு சிரமமும் இல்லாமல் மனமகிழ்ச்சியுடன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முக்கியச் சடங்கு வளைகாப்பு. கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் போடுவதன் மூலம் எளிதாக பிரசவம் ஆகும் என்பது ஐதீகம். தாயின் கையில் அணியப்பெற்ற கண்ணாடி வளையல்களின் ஒலி குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை தூண்டுவதாக அமைந்து, குழந்தைக்குப் பாதுகாப்பான உணர்வையும் நல்ல மனநிலையையும் தரும். வளைகாப்பில் எல்லோரும் குழந்தையையும், தாயையும் வாழ்த்துவதால் பெண்ணுக்குள் இருக்கும் பயம் குறைந்து மிகவும் சந்தோஷமும், மனதைரியத்துடனும் இருப்பாள்.

ஏழாவது மாதத்திற்கு பிறகு கணவன், மனைவி உடலுறவில் ஈடுபடுவது அபாயம். இதனால், பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் தான் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்தி இருவரையும் பிரித்து வைக்கின்றனர். ஏழு மாதத்திற்கு பிறகு தம்பதிகள் உறவில் ஈடுபட்டால் கருவில் வளரும் குழந்தை திரும்பிக் கொள்ளும், மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏழாவது மாதம் மூன்றாவது மூன்று மாத சுழற்சியின் துவக்கம். இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் சிசு இருவருக்கும் ஊட்டச்சத்துக்கள் அவசியம். வளைகாப்பு நிகழ்வின் போது உறவினர்கள் எல்லாரும் ஏழு விதமான அறுசுவை உணவுகள் தந்து கர்ப்பிணி பெண்ணை ஆசீர்வாதம் செய்வார்கள். இதனால் கர்ப்பிணி மற்றும் கருவில் வளரும் சிசுவும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் பெற்று ஆரோக்கியமாக இருப்பார்கள் சுகப்பிரசவம் ஆகவேண்டும் அதற்கு கர்ப்பிணி பெண்ணுக்கு மன நலமும், உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் வளைகாப்பு என்னும் நிகழ்வே நடத்தப்படுகிறது. அதிலும், முக்கியமாக ஏழாவது மாதத்தில். இவை யாவும் நுண்ணறிவுடன் முன்னோர்கள் செய்து வைத்துவிட்டு போன சம்பிரதாயங்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts