பிந்திய செய்திகள்

தந்தையானார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் மற்றும் மனைவி ஹேசல் கீச் தம்பதி, நேற்று தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள யுவராஜ் சிங் , “கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை ஆசீர்வதித்தார் என்பதை, எங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆசீர்வாதத்திற்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். இந்த சிறிய குழந்தையை நாங்கள் வரவேற்கும்போது எங்கள் தனியுரிமையை நீங்கள் மதிக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்

யுவராஜ் மற்றும் நடிகை ஹேசல் கீச் நவம்பர் 30, 2016 அன்று ஃபதேகர் சாஹிப் குருத்வாராவில் பாரம்பரிய முறையில் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதியின் முதல் குழந்தை இது.

2007-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளின் உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக இருந்த யுவராஜ் சிங், 2019-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts