பிந்திய செய்திகள்

ஆரம்பிக்கப்பட்ட குளிர்கால ஒலிம்பிக்போட்டிகள்…

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இந்த (2022) வருடத்திற்கான குளிர்கால ஒலிம்பிக்போட்டிகள் நேற்று கண்கவர் நிகழ்வுகளுடன் ஆரம்பித்துள்ளன.

உய்குர் முஸ்லிம் மக்கள் மீதான இனப்படுகொலை மற்றும் ஹொங்கொங் மீதான சீன ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா, பிரித்தானியா, ஒஸ்ரேலியா மற்றும் கனடா உட்பட்ட மேற்குலக நாடுகள் இராஜதந்திர புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்துள்ளன.

சீனாவுக்குரிய அரசியல், எதிர்ப்புகள் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் பின்னணியுடன் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குரிய குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று விழாக்கோலத்துடன் ஆரம்பமாகிய ஆரம்பவிழா வாணவேடிக்கைகளுடன் முடிவடைந்துள்ளன.

100 நிமிடங்களுக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வில் 3,000 கலைஞர்கள் இடம்பெற்றிருந்தனர். விழாவில் பங்கேற்றவர்களில் 95 வீதமானோர் பதின்ம வயதினராக இருந்தனர்.

2008 இன் கோடைகால ஒலிம்பிக்போட்டிகளுக்காக பெய்ஜிங்கில் நிர்மாணிக்கப்பட்ட பறவைக்கூடு மைதான அரங்கத்தில் இடம்பெற்ற ஆரம்ப விழாவுக்கு 2008 கோடை ஒலிம்பிக்கை நெறிப்படுத்திய ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒளிப்பதிவாளர் ஜாங் யிமோ தான் நெறிப்படுத்தியிருந்தார்.

பெய்ஜிங் நகரத்தை பொறுத்தவரை கோடை மற்றும் குளிர்கால ஒலிம்பிக் இரண்டுபோட்டிகளையும் நடத்தும் உலகின் முதல் நகரமாக பதிவாகியுள்ளது.

மறுபுறத்தே இந்த விழா மூன்றாவது முறையாக ஆட்சிக்கு தயாராகியுள்ள சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கிற்கும் ஒரு பரப்புரைகளமாக மாறியுள்ளது.

இதன் அடிப்படையில் உலகம் சீனாவின் பக்கம் கண்களைத்திருப்பியுள்ள நிலையில் எதற்கும் சீனா தயாராக உள்ளதாக ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது எல்லைகளை சீனா மூடியிருந்த நிலையில் அதற்குப்பின்னர் நடக்கும் முதல் பெரிய உலகளாவிய நிகழ்வாக இந்தகுளிர்கால ஒலிம்பிக்போட்டிகள் போட்டிகள் மாறியுள்ளன.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts