பிந்திய செய்திகள்

குளிர்கால ஒலிம்பிக்கில் சாதனை படைத்த நோர்வே வீராங்கனை….

சீனாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் முதல்நாளான நேற்று நோர்வே வீராங்கனை தெரேஸ் ஜோஹாக் முதலாவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

நேற்று முழுநாளும் நடந்தபோட்டிகளில் பனிச்சறுக்கு போட்டிகள், வேகபலகை போட்டிகள் மற்றும் தகுதிச் சுற்றுபோட்டிகள் இடம்பெற்றிருந்தன.

கொரோனா தொற்றுக்காலத்தில் நடத்தப்படும் இரண்டாவது ஒலிம்பிக்போட்டியாக இடம்பெற்றுவரும் இந்தப்போட்டியில், கடந்த வருடம் இடம்பெற்ற ரோக்கியோ ஒலிம்பிக் போட்டியை விட கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 20 ஆம் திகதிவரை இந்தப்போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts