பிந்திய செய்திகள்

ஐ பி எல் : வீரர்கள் ஏலம் போட்டாச்சு : முழு விபரம்!

பெங்களூரில் 2020ஆம் ஆண்டு ஐ.பி.எல். ரி-20 தொடருக்கான வீரர்களின் ஏலம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் இந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் 290 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் இடம்பெற்றுள்ள வீரர்களில் 228 பேர் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள் மீதி உள்ள வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடாத உள்ளூர் மற்றும் புதுமுக வீரர்கள் ஆவார்கள்.

வீரர்களின் அடிப்படை விலை 2 கோடி ரூபாய், 1.5 கோடி ரூபாய், 1 கோடி ரூபாய், 75 இலட்சம் ரூபாய், 50 இலட்சம் ரூபாய், 40 இலட்சம் ரூபாய், 30 இலட்சம் ரூபாய், 20 இலட்சம் ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடிக்கு 46 வீரர்களின் பெயர் உள்ளது.

2020ஆம் ஆண்டு ஐ.பி.எல். ரி-20 தொடருக்கான வீரர்களின் ஏலம் தற்போது பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 290 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் இடம்பெற்றுள்ள வீரர்களில் 228 பேர் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள் மீதி உள்ள வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடாத உள்ளூர் மற்றும் புதுமுக வீரர்கள் ஆவார்கள்.

வீரர்களின் அடிப்படை விலை 2 கோடி ரூபாய், 1.5 கோடி ரூபாய், 1 கோடி ரூபாய், 75 இலட்சம் ரூபாய், 50 இலட்சம் ரூபாய், 40 இலட்சம் ரூபாய், 30 இலட்சம் ரூபாய், 20 இலட்சம் ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடிக்கு 46 வீரர்களின் பெயர் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணியிடம்தான் ஏலத்தில் எடுக்க அதிக தொகை உள்ளது. அந்த அணியிடம் கைவசம் 72 கோடி இருக்கிறது.

டெல்லி அணிக்கு 47.5 கோடியும், கொல்கத்தா, மும்பை அணிகளுக்கு தலா .48 கோடியும், ராஜஸ்தானுக்கு 62 கோடியும், பெங்களூருக்கு 57 கோடியும், ஐதராபாத்துக்கு 68 கோடியும் எஞ்சி உள்ளன.

புதிய அணிகளான லக்னோவிடம் 58 கோடியும், அகமதாபாத்திடம் 52 கோடியும் கைவசம் உள்ளன.

தற்போது இடம்பெற்று வரும் ஏல விபரங்களை தற்போது பார்க்கலாம்:

 • இந்தியக் கிரிக்கெட் அணியின் ஷிகர் தவானை பஞ்சாப் கிங்ஸ் அணி இந்திய மதிப்பில் 8.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • இந்தியக் கிரிக்கெட் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பெட் கம்மின்சை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்திய மதிப்பில் 7.25 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது.
 • தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் கார்கிஸோ ரபாடாவை பஞ்சாப் கிங்ஸ் அணி இந்திய மதிப்பில் 9.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் ட்ரண்ட் போல்டை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி இந்திய மதிப்பில் 8 கோடி கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • இந்தியக் கிரிக்கெட் அணியின் ஸ்ரேயஸ் ஐயரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்திய மதிப்பில் 12.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • இந்தியக் கிரிக்கெட் அணியின் மொஹமட் ஷமியை குஜராத் டைடன்ஸ் அணி இந்திய மதிப்பில் 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் டு பிளெஸிசை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் குயிண்டன் டி கொக்கை லக்னஷ் சுப்பர்ஜியண்ட்ஸ் அணி இந்திய மதிப்பில் 6.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் டேவிட் வோர்னரை டெல்லி கெப்பிடல்ஸ் அணி இந்திய மதிப்பில் 6 கோடி கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • இந்தியக் கிரிக்கெட் அணியின் மணிஷ் பான்டேவை லக்னஷ் சுப்பர்ஜியண்ட்ஸ் அணி இந்திய மதிப்பில் 4.6 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷிம்ரோன் ஹெட்மியரை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி இந்திய மதிப்பில் 8.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • இந்தியக் கிரிக்கெட் அணியின் ரொபின் உத்தப்பாவை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது
 • இங்கிலாந்து அணியின் ஜேஸன் ரோய்யை குஜராத் டைடன்ஸ் அணி இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • இந்தியக் கிரிக்கெட் அணியின் தேவ்தத் படிக்கல்லை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி இந்திய மதிப்பில் 7.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • மேற்கிந்திய தீவுகள் அணியின் டுவைன் பிராவோவை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது.
 • இந்தியக் கிரிக்கெட் அணியின் நிதிஷ் ரணாவை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது.
 • மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜேஸன் ஹோல்டரை லக்னஷ் சுப்பர்ஜியண்ட்ஸ் அணி இந்திய மதிப்பில் 8.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • இந்தியக் கிரிக்கெட் அணியின் ஹர்சல் பட்டேலை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்திய மதிப்பில் 10.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • இந்தியக் கிரிக்கெட் அணியின் தீபக் ஹூதாவை லக்னஷ் சுப்பர்ஜியண்ட்ஸ் அணி இந்திய மதிப்பில் 5.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

*இலங்கை கிரிக்கெட் அணியின் வனிந்து ஹசரங்கவை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்திய மதிப்பில் 10.75 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது.

 • இந்தியக் கிரிக்கெட் அணியின் வொஷிங்டன் சுந்தரை சன்ரைசஸ் ஹைதரபாத் அணி இந்திய மதிப்பில் 8.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • இந்தியக் கிரிக்கெட் அணியின் குர்ணல் பாண்ட்யாவை லக்னஷ் சுப்பர்ஜியண்ட்ஸ் அணி இந்திய மதிப்பில் 8.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் மிட்செல் மார்சை டெல்லி கெப்பிடல்ஸ் அணி இந்திய மதிப்பில் 6.5 கோடி கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • இந்தியக் கிரிக்கெட் அணியின் அம்பத்தி ராயுடுவை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இந்திய மதிப்பில் 6.75 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது.
 • இந்தியக் கிரிக்கெட் அணியின் இசான் கிசானை மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய மதிப்பில் 15.25 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்துள்ளது.
 • இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜோனி பேயர்ஸ்டொவ்வை பஞ்சாப் கிங்ஸ் அணி இந்திய மதிப்பில் 6.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • இந்தியக் கிரிக்கெட் அணியின் தினேஷ் கார்த்திக்கை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்திய மதிப்பில் 5.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
 • மேற்கிந்திய தீவுகள் அணியின் நிக்கலோஸ் பூரானைசன்ரைசஸ் ஹைதரபாத் அணி இந்திய மதிப்பில் 10.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள்:

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் டேவிட் மில்லரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்தியக் கிரிக்கெட் அணியின் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் ஸ்டீவ் ஸ்மித்தை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஷகிப் அல் ஹசனை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் மொஹமட் நபியை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் மத்தியு வேடை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்தியக் கிரிக்கெட் அணியின் விருத்திமான் சஹாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சேம் பிளிங்ஸ்சை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts