பிந்திய செய்திகள்

விளையாட சென்ற அவிஷ்கவிற்கு அறுவை சிகிச்சை

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 5வது இருபதுக்கு 20 போட்டி நாளை முற்பகல் 11.40 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நாளைய ரி20 போட்டிக்கான அணியில் இருந்து இலங்கை கிரிக்கெட் வீரர் அவிஷ்க பெர்னாண்டோ நீக்கப்பட்டுள்ளார்.

அது அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நாளைய போட்டியில் இருந்து இலங்கை அணியின் அவிஷ்கா பெர்னாண்டோ விலகியுள்ளார்.

குறித்த காயம் காரணமாக அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்கு முழுமையாக குணமடைய குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்படுகின்றது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts