பிந்திய செய்திகள்

விராட் கோலியைப் பாராட்டி கடிதம் எழுதிய முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங்!

304 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியவர் யுவ்ராஜ் சிங். பிரபல வீரர் விராட் கோலியுடன் நெருக்கமான நட்பைக் கொண்டுள்ளார். இருவரும் இணைந்து இந்திய அணியிலும் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியிலும் விளையாடியுள்ளார்கள். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகத் தலைமை தாங்கிய 68 டெஸ்டுகளில் 40-ல் வெற்றி பெற்றுள்ளார் விராட் கோலி. சமீபத்தில் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் விராட் கோலியைப் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார் யுவ்ராஜ் சிங். அவருக்குத் தங்க ஷுக்களைப் பரிசாக வழங்குவதாகக் கூறியுள்ளார். கடிதத்தில் யுவ்ராஜ் சிங் தெரிவித்ததாவது:

தில்லியிலிருந்து கிளம்பிய சின்னப் பையன் விராட் கோலிக்கு, உங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையைக் கொண்டாடுவதற்காக இந்த சிறப்புமிக்க ஷுக்களைப் பரிசளிக்க விரும்புகிறேன். உங்களால் உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். நீங்கள் நீங்களாக இருந்து, உங்களைப் போல விளையாடி நாட்டை மேலும் பெருமைப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.

இளம் வீரராக இந்திய கிரிக்கெட்டின் சகாப்தங்களோடு இணைந்து விளையாடியவர். இப்போது நீங்களே சகாப்தமாக மாறிவிட்டீர்கள். உங்களுடைய அர்ப்பணிப்பும் பொறுப்புணர்வும் பல சிறுவர்களுக்கு ஊக்கமாக உள்ளன. உங்களால் இந்திய அணிக்காக விளையாடும் கனவை அவர்கள் அடைந்துள்ளார்கள்.

ஒவ்வொரு வருடமும் உங்கள் திறமையை வளர்த்து பல சாதனைகளைப் புரிந்துள்ளீர்கள். உங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைக் காண ஆவலாக உள்ளேன். கூட்டணி அமைத்து ரன்கள் எடுத்தது, உணவை ஏமாற்றிச் சாப்பிட்டது, பஞ்சாபி பாடல்களுக்கு நடனமாடியது, கோப்பைகளை வென்றது என அனைத்தையும் நாம் ஒன்றாகச் செய்துள்ளோம்.

எனக்கு நீ எப்போது Cheeku-வாகவும் கிரிக்கெட் உலகுக்கு கிங் கோலியாகவும் இருப்பாய். இலக்கை விரட்டுவதில் இன்னும் பல சாதனைகள் புரிவீர்கள். நீங்கள் ஒரு சூப்பர்ஸ்டார். உங்களுக்குத் தங்க ஷூக்களைப் பரிசாக வழங்குகிறேன். நாட்டைத் தொடர்ந்து பெருமைப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts