பிந்திய செய்திகள்

1வது டி20 : இலங்கை – இந்திய அணிகளுக்கிடையே நாளை ஆரம்பம்!

நாளை (24) முதலாவது டி 20 போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிகளுக்கிடையில் மூன்று ரி20 போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ரி20 போட்டி நாளை 24 ஆம் திகதியும், இரண்டாவது ரி 20 போட்டி 25 ஆம் திகதியும், மூன்றாவது ரி 20 போட்டி 27 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

இதேவேளை முதலாவது டெஸ்ட் போட்டி மார்ச் மாதம் 04 ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் மாதம் 12 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

இரு அணிகளிலும் கலந்து கொள்ளும் வீரர்கள் விபரம்…

இந்தியா: ரோகித் சர்மா (தலைவர்), பும்ரா (துணை தலைவர்) , இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா, யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அவேஸ்கான், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல்.

இலங்கை: தசுன் சானகா (தலைவர்), குசல் மெண்டிஸ், பெதும் நிசங்க, அஸ்லங்க, சந்திமால், குணதிலக, கமில் மிஸ்ரா, லியனகே, ஹசரங்க, கருணாரத்ன, சமீர, லஹிருகுமார, பினுர பெர்ணான்டோ, ஷிரன் பெர்ணான்டோ, மஹீஷ் தீக்சன, வாண்டர்சே, ஜெயவிக்ரம, அஷின் டேனியல்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts