பிந்திய செய்திகள்

இலங்கைக்கு வெள்ளையடித்த இந்தியா!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான3வதும் இறுதியுமான டி 20 போட்டியிலும் வெற்றிப் பெற்று இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரை இந்தியா அணி வௌ்ளையடிப்பு செய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் அவீஸ் கான் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, 147 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 16.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சிரயாஸ் ஐயர் ஆட்டமிழக்காது 74 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் லஹிரு குமார அதிகபட்சமாக 2 விக்கெட்டுக்களை வீழத்தினார்.

அதன்படி, இலங்கைக்கு எதிரான மூன்று டி 20 போட்டிகளிலும் வெற்றிப் பெற்று இந்தியா அணி தொரை கைப்பற்றியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts