பிந்திய செய்திகள்

தங்கத்தை வென்ற சவுரப் சவுத்ரி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தகுதி சுற்றில் 584 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து டாப்- 8 வீரர்களில் ஒருவராக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய இளம் வீரர் சவுரப் சவுத்ரி இறுதி சுற்றில் பிரமாதப்படுத்தினார்.

இலக்கை துல்லியமாக சுட்டு முன்னணி வீரர்களை பின்னுக்கு தள்ளிய 19 வயதான சவுரப் சவுத்ரி 16 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். உலக போட்டியில் அவரது 3-வது தங்கப்பதக்கம் இதுவாகும். ஜெர்மனியின் மைக்கேல் ஸ்சிவால்ட் வெள்ளிப்பதக்கமும், ரஷியாவின் ஆர்டெம் செர்னோசோவ் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இதன் பெண்கள் பிரிவில் இந்தியாவின் இஷா சிங் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். கிரீஸ் வீராங்கனை அன்னா கோராககி தங்கப்பதக்கம் வென்றார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts