பிந்திய செய்திகள்

ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.

2022 மகளிர் உலகக் கோப்பையின் 22-வது லீக் ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஸ்மிருதி மந்தனா 17-வது ரன்னை கடந்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 5000 ரன்களை அடித்த மகளிர் கிரிக்கெட் பட்டியலில் அவர் இணைந்துள்ளார். இந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா மொத்தம் 30 ரன்கள் எடுத்தார். அவர் 51 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்தார்.

ஸ்மிருதி மந்தனா ஒருநாள் போட்டியில் 2717 ரன்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 326 ரன்களும் டி20 போட்டியில் 1971 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 5000 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன் மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் இந்தியாவுக்காக இந்த சாதனையை படைத்துள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts