பிந்திய செய்திகள்

டோனிக்கு பின் நான்கு வீரர்களாலேயே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட முடியும்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த 35 வயதான சுரேஷ் ரெய்னாவை இந்த முறை யாரும் ஏலம் எடுக்கவில்லை. இதனால் ரெய்னா அடுத்த அவதாரம் எடுக்கிறார். இந்த சீசனில் வர்ணனையாளராக செயல்பட உள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘வர்ணனையாளர் பணிக்கு என்னை தயார்படுத்தி கொண்டுள்ளேன்.

எனது நண்பர்கள் இர்பான் பதான், ஹர்பஜன்சிங், பியுஸ் சாவ்லா ஆகியோர் ஏற்கனவே வர்ணனையாளராக உள்ளனர். இந்த சீசனில் ரவிசாஸ்திரியும் வர்ணனை குழுவில் இடம் பிடித்துள்ளார். எனவே இது எனக்கு எளிதாக இருக்கும் என்றே நினைக்கிறேன். தேவையான ஆலோசனைகளை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வேன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, வெய்ன் பிராவோ ஆகியோரால் அணியை வழிநடத்த முடியும். கேப்டன்ஷிப்புக்குரிய திறமை இவர்களிடம் உண்டு. ஆட்டத்தை நன்றாக புரிந்து செயல்படக்கூடியவர்கள். டோனிக்கு பிறகு சென்னை அணியின் அடுத்த கேப்டனாக வர முடியும்’ என்றார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts