கருட புராணம் என்னும் நூல் மனிதர்களின் வாழ்க்கையில் அவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதற்கு ஏற்ப பாவ-புண்ணிய கணக்கின் படி உயிர் பிரிந்த பின்பு மேலோகத்தில் தண்டனைகளை அனுபவிப்பதாக கூறுகிறது. அவன் தன் கர்ம வினையின் பயனாக அடுத்த பிறவியிலும் மனிதனாக பிறந்து துன்பத்தை அனுபவிப்பான் என்கிறது இந்நூல்.
ஒரு மனிதன் செய்யும் தவறுகளுக்கு எத்தகைய தண்டனைகள் கிடைக்கும்? என்னும் மாபெரும் ரகசியத்தை கூறக் கூடிய இந்த அற்புத நூலில் திருமணம் யாருக்கெல்லாம் நடைபெறாது? அவர்கள் என்ன பாவம் செய்தவர்களாக இருப்பார்கள்? என்பதையும் கூறி இருக்கிறது. அதைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.
ஒரு மனிதன் திருமணத்தின் பொழுது முழுமை அடைகிறான் என்று ஆன்மிகம் கூறுகிறது. திருமணம் செய்து தன் சந்ததிகளை வளர்க்கும் பொறுப்பு மனிதனுக்கு உண்டு. இந்த திருமணம் ஒருவருக்கு நடைபெறாமல் உரிய வயது வந்ததும் தடைபட்டுக் கொண்டே இருந்தால் அவர்கள் முற்பிறவியில் செய்த பாவத்திற்கான தண்டனையை அனுபவிப்பதாக கருட புராணம் கூறுகிறது.
அப்படியே திருமணம் நடந்தும் அந்த திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லாமலும், இன்பங்களை அனுபவிக்க முடியாமலும் தவிப்பவர்கள் இத்தகைய தவறுகளை செய்தவர்களாக இருப்பார்கள் என்று கருட புராணம் கூறுகிறது. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்கிற பழமொழி அனைவருக்கும் தெரியும் அல்லவா? ஒரு உயிரினத்தை கொள்பவர்களுக்கு தான் அந்த பாவம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது.
இந்த வகையில் ஒரு உயிரைக் கொன்று அதன் இறைச்சியை விற்பவர்களுக்கு அடுத்த பிறவியில் அதன் தண்டனையாக திருமணம் நடைபெறாமல் அடுத்த தலைமுறையை அவன் ஈன்றெடுப்பதில் பிரச்சனைகளையும் அனுபவிப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வுலகில் மனிதர்கள் மட்டுமல்லாமல் இன்ன பிற உயிரினங்களும் வாழ்வது எதற்காக என்று பலமுறை சிந்தித்து பார்த்திருப்போம்.
மனிதப் பிறவி என்பது மிக உயர்ந்த பிறவியாகும். நம்மால் எது சரி? எது தவறு? எது நன்மை? எது தீமை? நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? அறநெறியில் நடப்பது எவ்வளவு முக்கியம்? என்பதை பிரித்து பார்த்து நடந்து கொள்ள முடியும். அப்படி இருந்தும் அறிவை இழந்து மிருகங்களைப் போல நடந்து கொள்ளும் சிலருக்கு கருட புராணம் கூறும் தண்டனைகளை கேட்டாலே தன் தவறுகளை திருத்திக் கொள்ளும் அளவிற்கு மனம் மாறுபடும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
இப்படி முற்பிறவியில் பல உயிரினங்களைக் கொன்று இறைச்சியை விற்பனை செய்து அந்த பணத்தில் வாழக்கூடியவர்கள் இப்பிறவியில் திருமண பந்தத்தில் ஈடுபட முடியாமல் தோஷங்களை அனுபவிப்பதாக கூறுகிறது கருட புராணம். இத்தகையவர்கள் அடுத்தடுத்த பிறவிகளில் மயிலாக பிறப்பு எடுத்து தன் பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் மற்ற உயிரினங்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து வாழ வேண்டும். இறந்த பின்பு நாம் என்ன பார்க்கவா போகிறோம்? என்று பலரும் செய்யும் தவறை செய்யாமல் இருப்பதற்காகவே இந்த கருட புராணம் பல தெய்வ ரகசியங்களை தன்னுள் புதைத்து கொண்டுள்ளது. இது உண்மையோ? பொய்யோ? ஆனால் மனிதன் திருந்தி வாழக்கூடிய வகையில் சொல்லப்பட்டுள்ள தகவல்களை வரவேற்கலாமே!