பிந்திய செய்திகள்

பூஜை செய்யும் போது இந்த மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு பூஜை செய்யுங்கள்

சிலபேருக்கு அன்றாடம் வீட்டில் பூஜை செய்யும் போது மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவழிபாட்டில் கவனம் செலுத்த முடியாது. மனது ஏதேதோ அலைபாய்ந்து கொண்டிருக்கும். எதிர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றும்.

செய்த பூஜைக்கு ஒரு திருப்தியும் இருக்காது. அதே சமயம் பூஜை செய்வதற்கு உண்டான பலனையும் நம்மால் பெற முடியாத ஒரு சூழ்நிலை நிலவும். நிறைய பேர் அனுபவப்பூர்வமாக இதை உணர்ந்திருப்பார்கள்.

இப்படி இறை வழிபாட்டில் மனதை ஈடுபடுத்த முடியாமல் சஞ்சல படக்கூடிய மனதிற்கு, அமைதியைத் தரக் கூடிய சாந்தத்தைக் தரக்கூடிய, நேர்மறை ஆற்றலைக் கொடுக்கக்கூடிய ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து நெருக்கத்தை அதிகரித்து தரக்கூடிய அந்த மாலை ஸ்படிக மாலை. ஸ்படிக மாலையை போட்டால் நம்முடைய உடம்பும் மனதும் குளிர்ச்சியாக இருக்கும். பெரும்பாலும் இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் அல்லவா. ஸ்படிக மாலையை முறையாக எப்படி பயன்படுத்தலாம்.

ஸ்படிக மாலையை பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறைக்கு வந்து ஆண்களாக இருந்தால் நெற்றியில் நீர் இட்டுக்கொள்ளுங்கள். பெண்களாக இருந்தால் குங்கும திலகம் இட்டு கொண்டு ஸ்படிகமாலையை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டு, அதன்பின்பு இறைவனுக்கு தீபம் ஏற்றி இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்படிக மாலையை அணிந்து கொண்டு இறை நாமத்தை உச்சரித்து வழிபாடு செய்யுங்கள்‌. மந்திரங்கள் சொல்வதாக இருந்தாலும் சொல்லலாம். பூஜை செய்யக் கூடிய அந்த 1/2 மணி நேரமோ, 1 மணி நேரமும் மட்டும் ஸ்படிக மாலை உங்களுடைய கழுத்தில் இருக்கட்டும்.

அதன் பின்பு பூஜை முடிந்தவுடன் ஸ்படிக மாலையை கழட்டி மீண்டும் பூஜை அறையிலேயே வைத்து விட்டு, உங்களுடைய தினசரி வேலையைத் தொடங்கலாம். இப்படி ஸ்படிக மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு இறைவழிபாடு செய்யும் போது உங்களிடம் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

அதாவது இறை சக்தியை, நேர்மறை ஆற்றல் ஈர்க்கக் கூடிய தன்மை இந்த ஸ்படிக மாலைக்கு உண்டு. ஸ்படிக மாலையானது நேர்மறை ஆற்றலை ஈர்த்து வைத்திருக்கும். அந்த ஸ்படிக மாலையை நீங்கள் போட்டுக் கொள்ளும் போது உங்களுக்குள் அந்த நேர்மறை ஆற்றலும் இறை சக்தியும் புகுந்துவிடும்.

இப்படி இந்த ஸ்படிக மாலையை போட்டுக்கொண்டு பூஜை செய்யும்போது இறைவனிடத்தில் வேண்டுதல் வைத்தால், அது கூடிய சீக்கிரத்தில் நிறைவேறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பாருங்கள். இறைவனை அடையும் வழி, சீக்கிரத்தில் உங்களுக்கு தெரியும். இறை சக்தியை சீக்கிரமே உணர்வீர்கள்.

சிலபேருக்கு ஒருசில சந்தேகங்கள் எழும். அசைவம் சாப்பிடுபவர்கள் இந்த மாலையை போட்டுக் கொள்ளலாமா. பெண்கள் இந்த மாலையை போட்டுக் கொள்ளலாமா. மாதவிடாய் நாட்களில் என்ன செய்வது. மாதவிடாய் நாட்களில் பெண்கள் பூஜை அறைக்கு உள்ளே செல்ல போவது கிடையாது. அதனால் மாதவிடாய் நாட்களில் பெண்கள் இந்த மாலையை அணிய போவது இல்லை.

பூஜை செய்து முடித்த பின்பு அசைவ உணவு சாப்பிடக்கூடாது. இன்று அசைவ உணவு சாப்பிடுகிறீர்கள் என்றால், அடுத்த நாள் தலைக்கு ஸ்நானம் செய்துவிட்டு அதன் பின்பு படிக மாலையை அணிந்து கொண்டு பூஜை செய்யலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. அசைவம் சாப்பிட அன்று ஸ்படிக மாலையை தொடாதீங்க.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts