பிந்திய செய்திகள்

கோவிலில் கொடுத்த பூமாலையை வீட்டில் என்ன செய்யவேண்டும்

கோவிலில் சுவாமிக்கு அணிவித்து பிரசாதமாக கொடுக்கப்படும் மாலைகளுக்கு நிர்மால்யம் என்று பெயர். இவற்றை மற்ற சுவாமி படங்களுக்கு சாத்தக் கூடாது. மாறாக வீட்டு வாசல் மற்றும் வாகனங்களுக்கு அணிவிக்கலாம்

புதிதாக செய்த சுவாமி சிலைக்கு சக்தி இருக்குமா ? தங்கத்தை உருக்கி சிலை செய்தாலும் அதற்கு உடனே சக்தி வந்துவிடாது. ஆன்மீக ரீதியாக அந்த சிலைக்கு சக்தியூட்ட சில விதிமுறைகள் உள்ளன. தானிய வாசம், ஜலவாசம், சயன வாசம் இப்படி சில சடங்குகளை செய்தபின்னேர் சிலைக்கு தெய்வீக சக்தி கிடைக்கும்.

துர்கை சிலை வடக்கு நோக்கி மட்டும் தான் இருக்க வேண்டுமா ? பெரும்பாலான கோவில்களில் துர்கை அம்மனின் சிலை வடக்கு நோக்கியே இருக்கும். ஆனால் சில கோவில்களில் தெற்கு நோக்கியும் துர்கை சிலை இருக்கும்.
அந்த கோவிலில் உள்ள துர்கை அம்மனும் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறார். உதாரணத்திற்கு கோவிலில் துர்கை அம்மன் தெற்கு நோக்கியே அருளிபாலிக்கிறார் எனின் கோவிலில் உள்ள துர்கை அம்மனை வணங்கினால் எந்த ஒரு நோயும் நீங்கும் என்பது நம்பிக்கை.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts