பிந்திய செய்திகள்

பெண்கள் ரெண்டு புருவத்துக்கும் நடுவில் பொட்டு வைப்பது சரியா? தவறா?

பெண்கள் நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்வது ரொம்பவே புனிதமாக கருதப்படுகிறது. பொட்டு வைக்காத பெண்களைப் பார்த்தாலே பெரியவர்களுக்கு கோபம் வரும். போய் முதலில் பொட்டு வைத்துக் கொள்.. என்று அதட்டி அனுப்புவார்கள். ரெண்டு புருவத்துக்கும் நடுவில் பொட்டு வைப்பது சரியா? தவறா? பொட்டு எந்த நேரத்தில், எங்கே, யார், எப்படி வைக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

திருமணமாகாத கன்னிப் பெண்கள் எந்த நிறத்தில் வேண்டுமானாலும் பொட்டு அணிந்து கொள்ளலாம். அதில் குறிப்பிட்டு கருப்பு நிற போட்டு கன்னிப்பெண்கள் அணிந்து கொள்வது துஷ்ட சக்திகளிடம் இருந்து பாதுகாப்பை அளிக்கும் என்று கூறுவார்கள். இரு புருவத்திற்கு நேரே பொட்டு வைப்பது என்பது வர்மப் புள்ளிகளைத் தூண்டி பெண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். பெண்கள் மெட்டி அணிந்து கொள்வதும், பொட்டு வைத்துக் கொள்வது கருப்பை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் ரகசிய வழி முறைகளாக அக்காலத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திருமணமான பெண்கள் கருப்பு நிற பொட்டு அணிவதை தவிர்ப்பது நல்லது. திருமணமான பெண்கள் லட்சுமி கடாட்சமாக இருக்க வேண்டும் என்பதால் இவர்கள் செந்நிற பொருட்களை விரும்பி தேர்ந்தெடுத்து அணிந்து கொள்வது நல்லது. சிகப்பு நிற பொட்டு, வாடாமல்லி நிற குங்குமம் அல்லது பொட்டு போன்றவை அணிவது கூடுதல் சிறப்பு! செந்தூரம் அணிவதும் பெண்களுக்கு ரொம்பவே பாதுகாப்பான மற்றும் தைரியமான உணர்வை ஏற்படுத்தும்.

சாதாரண பொட்டு தானே இதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? என்று ஆச்சரியமாக பார்க்கலாம். நடு நெற்றியில் பொட்டு அணிவது என்பது மிகுந்த நன்மைகளை அள்ளிக் கொடுக்கக் கூடிய ஒரு ரகசியம் ஆகும். பெண்கள் இரு புருவதிற்கும் நடுவே செந்தூரம், குங்குமம், சந்தனம், மஞ்சள் ஆகிய ஏதாவது ஒரு தெய்வீக அம்சம் பொருந்திய ஒன்றை இட்டுக் கொள்வது லட்சுமி கடாட்சத்தை பெருகச் செய்து, அவர்களை நெருங்கும் துஷ்ட சக்திகளை அழிக்கும் ஆற்றலும் கொண்டது. எனவே இரு புருவத்திற்கு நேரே பொட்டு வைப்பதை விட, அதற்கு மேல் போட்டு வைத்துக் கொள்ளலாம். இரு புருவத்திற்கு நேரே குங்குமம் இட்டுக் கொள்வது, சந்தனம் இட்டுக் கொள்வதும் செய்து கொள்ளலாம்.

பொட்டிற்கு மேலே திருநீறு எனும் விபூதி இட்டுக் கொள்ளலாம். திருநீறு அணியும் பொழுது மட்டும் பொட்டுக்கு மேலே வைப்பது விசேஷமானது. திருமணமான பெண்கள் கருப்பு பொட்டு வைக்கக் கூடாது என்று கூறுவார்கள். அதற்கு பதிலாக அவர்கள் கண்மை வைத்துக் கொள்ளலாம். கண்மை வைப்பவர்கள் வீட்டிலேயே இயற்கையாக தயாரித்து வைப்பது நல்லது. கலப்பட பொருட்கள் கண்களுக்கு கீழே கருவளையத்தை ஏற்படுத்திவிடும். கணவனை இழந்த பெண்கள் பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவதும் இதற்காகத்தான்!

புருவத்தின் நடுப்பகுதி வர்மப் புள்ளிகளைத் தூண்டி, ஹார்மோன்களை சீராக்கக்கூடிய ஆற்றல் கொண்டது என்பதால் அவர்களை பொட்டு வைப்பதை தவிர்க்க கூறுவார்கள். மற்றபடி கணவனை இழந்தவர்கள் பொட்டு வைக்கக் கூடாது என்று கூறுவதில் வேறு எந்த காரணங்களும் கிடையாது. கண்ணுக்குத் தெரியும்படி பொட்டு வைப்பதும், பொட்டு வைத்துக் கொண்டு குங்குமம், சந்தனம் இட்டுக் கொள்வது மகாலட்சுமி கடாட்சத்தை ஒரு பெண்ணிற்கு கொடுக்கும். அது மட்டுமல்லாமல் அவர்களை பார்க்கும் வெளி நபர்களுக்கும், ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்தி, தவறான பார்வையிலிருந்து திசை திருப்பும். எனவே இத்தகைய அற்புத சக்தி வாய்ந்த பொட்டை தவிர்க்காமல் பெண்கள் அனைவரும் அணிந்து கொள்வது நலமாகும்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts