பிந்திய செய்திகள்

பெண் குழந்தை இல்லாதவர்கள் இந்தப் பொருளை தானமாகக் கொடுத்தால் போதும்.

மகாலட்சுமியை நினைத்து பூஜை அறையில் பூஜை புனஸ்காரங்களை செய்து, லட்சுமி தாயாரை வீட்டிற்குள் அழைத்து நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சத்தை நிலைக்க வைப்பதற்கு நாம் பெரிய அளவில் கஷ்டப்பட வேண்டும். ஆனால், உங்கள் வீட்டில் மகாலட்சுமி நீங்கள் கூப்பிடாமலேயே உள்ளே வருவாள். பெண் குழந்தைகளுக்கு இந்த பொருளை தானமாகக் கொடுத்தால். அது எந்த பொருள் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா.

பெண் குழந்தை பிறந்த உடனேயே முகத்தை சுழித்துக் கொண்டு, ‘பெண் குழந்தையா?’ என்று கேட்டது அந்த காலம். அந்த மகாலட்சுமியே என் வீட்டில் வந்து பெண் குழந்தையாக பிறந்து உள்ளார் என்று சொல்வது இந்த காலம். எந்த வீட்டில் பெண் குழந்தைகளை போற்றிப் புகழ்ந்து ஆரவாரத்துடன் தலையில் தூக்கிக்கொண்டு வைத்துக் கொண்டாடுகிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் கூப்பிடாமலேயே, வீட்டிற்குள் நுழைந்து விடுவாள்.

என் வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்வதற்கான நேரமே கிடையாது. வாரத்தில் 6 நாட்களும் வேலை வேலை. வேலை விடுமுறை என்றால் வீட்டு வேலை. இதில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி மகாலட்சுமியை இரு கை கூப்பி வணங்க கூட நேரமில்லை. கவலையே வேண்டாம். ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள். உங்க வீட்டுக்கு மகாலட்சுமி நிரந்தரமாக குடியேற வேண்டும் என்றால் இதை செய்யுங்கள். (இதற்காக வீட்டில் தீபம் ஏற்றாமல் அப்படியே போட்டு வைக்க வேண்டும் என்பது அர்த்தமில்லை. முடிந்தவரை பூஜையில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்

வெள்ளிக்கிழமை ஒரு பெண் குழந்தைக்கு உங்களால் முடிந்த கண்ணாடி வளையலை வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். உங்களால் முடிந்த புதிய ஆடையை வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். உங்களால் முடிந்த அழகான வாசனை நிறைந்த பூக்களை வாங்கி அவர்களுடைய தலையில் வைத்து விட வேண்டும். இந்த எல்லாப் பொருட்களையும் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை நினைத்து தானம் செய்யுங்கள்.

நீங்கள் வாங்கிக் கொடுத்த கண்ணாடி வளையல் சத்தம் அந்த குழந்தையின் கைகளில் ஒலிக்கும் போது, அந்த குழந்தையுடைய மனது சந்தோஷப்படும் போது, உங்கள் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வந்துவிடுவாள்‌. நீங்கள் வாங்கிக் கொடுத்த புத்தாடையை அந்த குழந்தை போட்டு மனமகிழ்ச்சியை அடையும்போது உங்கள் குடும்பத்திற்கு மகாலட்சுமியின் ஆசிர்வாதம் கிடைத்துவிடும். அந்த சிறிய குழந்தையின் தலையில் வாசனை நிறைந்த பூவை வைத்து அழகு பார்க்கும் போது, உங்களுடைய வீட்டில் மங்களகரமான காரியங்கள் அழகாக நடக்கத் தொடங்கிவிடும்.

நிறைய செய்ய வேண்டாம். 4 கண்ணாடி வளையல் வாங்கிக் கொடுத்தால் கூட போதும். 6 மாதத்திற்கு ஒரு முறையோ, வருடத்திற்கு ஒரு முறையோ ஒரு ஏழை குழந்தைக்கு புத்தாடை வாங்கிக் கொடுத்தாலே போதுமானது. கண்ணாடி வளையல் வாங்குவதற்கு நமக்கு பெரியதாக எந்த செலவும் ஆகப்போவதில்லை. இரண்டிலிருந்து மூன்று டசன் சிறிய குழந்தைகள் அணிவது போல கண்ணாடி வளையலை வாங்கி வைத்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை தோறும் கோவிலுக்கு சென்று அங்கு வரக் கூடிய சிறிய பெண் குழந்தைகளுக்கு இந்த கண்ணாடி வளையலை தானமாக கொடுத்தால் நன்மை தரும்.

அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டின் அக்கம் பக்கத்தில் இருக்கும் ஏழைப் பெண் குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு இந்த தானத்தை கொடுங்கள். உங்களுக்கு திருமணமாகி குழந்தை பாக்கியம் தள்ளி போகும் பட்சத்தில், இந்த பரிகாரத்தை செய்தால் சீக்கிரமே குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த சிறிய தானத்தை செய்து, பெரிய அளவிலான பலனை அடையலாம்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts