பிந்திய செய்திகள்

வெள்ளிக்கிழமை சமையலில் சேர்க்கக் கூடாத பொருட்கள்! இவற்றை சேர்த்தல் கஷ்டம் வருமாம்!

வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கு உரிய ஒரு தெய்வீக நாளாக கருதப்படுகிறது. எந்த கிழமையில் நம் வீட்டில் பூஜை செய்தாலும், செய்யாவிட்டாலும் வெள்ளிக்கிழமையில் கட்டாயம் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் என்பது நியதி.

செவ்வாய், வெள்ளி வழிபாடு செய்யாதவர்கள் இல்லத்தில் மகிழ்ச்சி எனும் செல்வம் குறையும் என்கிற நம்பிக்கை உண்டு. எனவே இந்த வெள்ளிக்கிழமையில் கட்டாயம் சமையலில் சேர்க்கக் கூடாத பொருட்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வெள்ளிக்கிழமை என்பது ஆன்மீக ரீதியான சிந்தனைகள் மேலோங்கி காணக்கூடிய ஒரு நாளாக இருக்கிறது. இந்நாளில் இனிப்பான சம்பவங்கள் நடக்க, இனிப்பான பொருட்களை சமைப்பது முறையாகும்.

பொங்கல் வைப்பது, பாயாசம் செய்வது போன்ற நைவேத்திய பொருட்களை பூஜைக்கு பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் அதனை பகிர்ந்து சாப்பிடும் பொழுது மகிழ்ச்சி பெருகும்.

உணவு என்பதும் ஒரு தெய்வீக விஷயம் தான். எல்லா வகையான உணவுகளும் ஒவ்வொரு விதத்தில் நம்முடைய ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கின்றன. சரியான உணவு முறை இல்லாவிட்டால் ஆரோக்கியக் குறைபாடு ஏற்பட்டு ஆயுள் குறையும்.

வெள்ளிக்கிழமையில் பொதுவாக சாம்பார், உருளைக்கிழங்கு செய்வது உண்டு. சாம்பார் இல்லாத வீடுகளே வெள்ளிக்கிழமையில் நிச்சயம் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு பருப்பு போட்டு செய்யப்படும் ஒரு உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஏன்?

துவரம் பருப்பு என்பது ரொம்பவே முக்கியமான ஒரு பருப்பு வகையாகும். துவரம்பருப்பு கொண்டு செய்யப்படும் பொருட்களினால் லட்சுமி அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனால் தான் அன்றைய நாளில் துவரம்பருப்பு போட்டு சாம்பார் வைப்பது வழக்கம்.

அதுமட்டுமல்லாமல் பல வகையான காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் சாம்பார் செய்வது ரொம்பவே சிறப்பான பலன்களை கொடுக்கும். பல காய்களை போட்டு வைக்கப்படும் சாம்பாரை சமைத்து ருசி பார்க்காமல் நெய் சேர்த்து பூஜை அறையில் நைவேத்யம் படைத்து வழிபட்டு, காகத்திற்கு படைத்து வந்தால் சகல விதமான பாவங்களும் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

மேலும் வெள்ளிக்கிழமையில் கட்டாயம் கசப்பான பொருட்களை சமைக்கக் கூடாது என்கிற ஒரு நியதி உண்டு. கசப்பு மகிழ்ச்சியை குறைக்கும் என்பதாலும், அந்நாளில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்க கூடாது என்பதாலும் பாகற்காய் போன்ற கசப்பான பொருட்களை அன்றைய நாளில் சமைக்கக்கூடாது.

அந்த வகையில் அகத்திக்கீரையும் வெள்ளி கிழமையில் சமைக்கக்கூடாத ஒரு கீரை வகையாகும். பித்ரு தோஷம் போக்கவும், பித்ருகளுக்கு சாந்தி கொடுக்கவும் அகத்திக்கீரையை பசுவிற்கு தானம் கொடுக்கிறோம்.

அமாவாசையில் அகத்திக்கீரையை பசுவிற்கு தானம் கொடுத்து வந்தால் பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல் அகத்திக் கீரையில் ஒரு சிறு கசப்புத் தன்மை காணப்படுகிறது.

எப்போதும் கசப்பான பொருட்கள் உடலில் இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடலை சுத்தமாக செய்யும் எனவே அடிக்கடி கசப்பான பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் ஆனால் வெள்ளிக்கிழமையில் இந்த கசப்பான பொருட்களை தவிர்ப்பது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.

மற்ற நாட்களில் தாராளமாக எவ்வளவு வேண்டுமானாலும் கசப்பை சேர்த்து ஆரோக்கியத்தை பெருக செய்யலாம். வெள்ளிக்கிழமையில் மட்டும் பயறு வகைகள் போட்டு காரக் குழம்பு செய்வது, கசப்பான உணவுப் பொருட்களை சமைப்பது, அகத்திக் கீரை உபயோகப்படுத்துவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts