பிந்திய செய்திகள்

குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கின்றதா என்பதை அறிந்துகொள்ள இந்த மூன்று முக்கிய அறிகுறிகளை பார்போம்

ஒரு சிலருக்கு குல தெய்வம் என்றால் என்ன என்பதே தெரிவதில்லை. அது மட்டுமல்லாமல் தங்கள் குலதெய்வம் எதுவென்றும் அவர்கள் அறிந்திருப்பதில்லை. இப்படி குலதெய்வம் தெரியாதவர்கள் தங்கள் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வத்தைப் பற்றி தெரிந்து கொண்டு, முதலில் குலதெய்வத்தை வணங்கி வரவேண்டும். குலதெய்வம் திருப்தியாக இருந்தால் மட்டுமே நமது குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடைபெறும், தீமைகள் விலகி போகும்.

ஒருவரது வீட்டில் பல்லிகள் சத்தமிட்டு கொண்டிருந்தால் அங்கு குல தெய்வம் இருப்பதை அறிந்து கொள்ளலாம். ஒரு சில வீடுகளில் பல்லிகள் இருக்கும் ஆனால் அவை சத்தம் எழுப்பாமல் இருக்கும். எதுவாக இருந்தாலும் வீட்டில் பல்லிகள், சிறு பூச்சிகள், பறவைகள் போன்றவைகள் வந்தாலே அந்த வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருப்பதாக தான் அர்த்தம்.

அவ்வாறு நாம் ஒரு விஷயத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது பல்லிகள் சத்தம் எழுப்பினால், அவை எந்த திசையில் இருந்து சத்தம் எழுப்புகிறது என்பதை கவனித்து பார்த்தோம் என்றால், அந்த விஷயம் நடக்குமா? நடக்காதா? என்பதை உணர்த்தும் வகையில் இருக்கும். அது போல வெளியில் செல்லும்பொழுது பல்லி சத்தம் எழுப்பினால் நாம் செல்லும் காரியம் நல்லபடியாக நடக்கும் என்று அர்த்தமாகும். இவ்வாறு நம் வீட்டிலிருக்கும் தெய்வத்தின் கூற்றுப்படி தான் நமக்கு சத்தம் எழுப்புகின்றன.

balli

அதுபோல குலதெய்வ கோவிலில் இருந்து வாங்கி வரும் எலுமிச்சை பழத்தை சிலர் பணம் வைக்கும் டப்பா, அல்லது பூஜை அறையில் வைத்திருப்பார்கள். சில நாட்கள் செல்ல செல்ல இது காய்ந்து போக வேண்டுமே தவிர அழுகிப் போக கூடாது. இவ்வாறு எலுமிச்சை பழம் அழுகிவிட்டது என்றால் நமது வீட்டில் இறை சக்தி இல்லை என்றுதான் அர்த்தம்.

lemon2

அதுமட்டுமல்லாமல் சிலரது வீட்டில் சம்மந்தமே இல்லாமல் திடீரென விபூதி மணம், சந்தன வாசனை, அபிஷேக வாசனை, சுருட்டு வாசனை, பிராந்தி வாசனை, மல்லிகை பூ மணம் போன்றவை சம்மந்தம் இல்லாமல் திடீரென நம்மை உணர வைக்கும். இவ்வாறு உங்கள் குல தெய்வத்திற்குப் படைக்கும் ஒரு சில பொருட்களின் அறிகுறியாக இந்த வாசனைகள் இருக்கலாம். அப்படி இருந்தால் உங்கள் வீட்டில் உங்கள் குலதெய்வம் வாசம் செய்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.உங்கள் குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கின்றதா என்பதை அறிந்துகொள்ள இந்த மூன்று முக்கிய அறிகுறிகளை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts