பிந்திய செய்திகள்

நாம் மரணித்தபிறகு எமலோகத்திற்கு செல்லும் வழியில் ‘வைதரணி’ எனும் ஆற்றை பற்றி தெரிந்தால், நீங்கள் இந்த தவறுகளை எல்லாம் தெரியாமல் கூட செய்யவே மாட்டீர்கள்!

ஒரு மனிதன் வாழும் பொழுது என்னென்ன பாவங்களை செய்கிறானோ, அந்த பாவங்களுக்கான தண்டனைகள் எல்லாம் இறைவன் வழங்குவதாக கருட புராணம் எடுத்துரைக்கிறது. எந்தெந்த பாவத்திற்கு எந்தெந்த தண்டனைகள் கிடைக்கும்? என்பதையும் அதில் மிகவும் சுவாரசியமாக குறிப்பிடப்பட்டிருக்கும். இந்து மதத்தின் படி கருட புராணம் சொல்லும் தண்டனைகளை எல்லாம் கேட்டாலே ஒரு மனிதன் தவறுகளை செய்யாமல் நல்லபடியாக வாழ துவங்குவான்.

அத்தகைய அதிசக்தி வாய்ந்த இந்த கருட புராணத்தில் ஒரு மனிதன் இறந்த பின்பு யமலோகம் செல்லும் வழியில் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதாக கூறுகிறது. அதில் வைதரணி எனும் நதியில் விழுந்து துன்பப்படுவார்கள் யாரெல்லாம்? என்று தெரிந்தால் நிச்சயம் வாழும் காலத்தில் யாரையும் ஏமாற்றாமல் நேர்மையாக நடந்து கொள்வோமாம். அப்படி அந்த நதியின் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? அந்த நதி எப்படி இருக்கும்? யாரெல்லாம் அதில் விழுந்து துன்பப்படுவார்கள்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வைதரணி நதி என்பது மிகவும் மோசமான ஒரு நதி ஆகும். ரத்தமும், சீழும், மலமும், சிறுநீரும் கலந்திருக்கும் இந்த நதியில் வித்தியாசமான முகங்களுடன் கூடிய பிராணிகளும், ஜந்துக்களும் வாழ்ந்து கொண்டிருக்கும். நீங்கள் இறந்த பின்பு எமலோகம் செல்லும் வழியில் இந்த நதியில் உங்களை எமதூதர்கள் தள்ளி விட்டு விடுவார்கள். இதில் கிடந்து நீங்கள் செய்த பாவத்திற்கான தண்டனையை ஏற்று அதில் உழன்று அந்த ஜந்துக்களிடம் பல்வேறு துன்பங்களை அனுபவித்து ஆக வேண்டும் என்பது விதியாகும்.

கருடாழ்வாருக்கு நாராயணர் கருட புராணத்தை பற்றி கூறும் பொழுது இவ்வாறு கூறுகின்றார். பூமியில் ஒரு மனிதன் வாழும் பொழுது தான் மட்டுமே உயர்ந்தவன் என்கிற அகந்தையுடன் இருக்கக் கூடாது. அகந்தை கொண்டு பெற்றெடுத்த பெற்றோர்களை சரிவர கவனிக்காமல் அவர்களை கஷ்டப்படுத்து பவர்களுக்கு, பாடம் புகட்டிய ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்காமல் அவமதிப்பு செய்பவர்களுக்கும் வைதரணி நதியில் தண்டனை உண்டாம்.

உண்மையாக நேசித்த ஒருவருக்கு துரோகம் செய்தவர்களுக்கும், நீங்கள் வாழக்கூடிய வகையில் பல்வேறு விதத்தில் உங்களுக்கு உதவியாக இருந்த நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் துன்பம் கொடுப்பவர்களும், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் என பார்க்காமல் உடல் ரீதியாக அவர்களை துன்பப் படுத்தியவர்களுக்கும், பிறர் செய்கின்ற தானத்தை தடுப்பவர்கள், சுப காரியத்தில் தடைகளை ஏற்படுத்துபவர்கள், பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வழங்கி பின்னர் எளியவர்களை ஏமாற்றுபவர்களுக்கும் வைதரணி நதியில் தண்டனை உண்டு.

ஆன்மீக கருத்துகளில் இருக்கக்கூடிய உள்ளார்ந்த கருத்துக்களை உணராமல், ஆதாரமில்லாமல் அதனை தவறாக கூறுபவர்களுக்கு, திருமணத்திற்கு தயாராக இருக்கும் மணப்பெண்ணின் மீது அனாவசிய பழிகளை சுமத்தி அவள் வாழ்க்கையை கெடுப்பவர்களுக்கும், வேண்டியவர்களுக்கு மட்டுமே உதவி செய்து, வேண்டாதவர்களுக்கு கிடைக்கக் கூடிய உதவிகளை தடுத்து மோசமாக நடந்து கொள்பவர்களுக்கும், தேவையே இல்லாமல் அப்பாவிகளின் மீது கோபத்துடன் இருந்து எப்பொழுதும் கரித்து கொட்டுபவர்களுக்கும் வைதரணி நதியில் தண்டனை உண்டு. நல்ல வழியில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்து கொள்ளும் எவராக இருந்தாலும், நீங்கள் இறந்த பின்பு யமலோகம் செல்லும் வழியில் இந்த வைதரணி நதியில் மூழ்கி மோசமான ஒரு அனுபவத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதை கருத்தில் கொண்டு வாழும் காலத்திலேயே நல்லது செய்ய முடியாவிட்டாலும், கெட்டது செய்யாமல் இருப்பது நல்லது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts