பிந்திய செய்திகள்

கடன் கொடுத்த நகை திரும்பி வரவும், வாராக் கடன் திரும்பக் கிடைக்கவும், இந்த இலையை வைத்து பரிகாரம் செய்து பாருங்கள்.

கடன் என்ற வார்த்தை உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் நிலைமைக்கு ஏற்ப கடன் வைத்துள்ளனர். அதாவது ஏழை முதல் பணக்காரர்கள் வரை கடன் வாங்குவது வழக்கமாக மாறிவிட்டது. கடன் என்பது இல்லாமல் எவருமே கிடையாது. இதில் கடன் வாங்குபவரை விட கடன் வாங்கி கொடுப்பவர்களுக்கு தான் அதிகமான பிரச்சனை இருக்கிறது. ஒருவருக்கு நாம் உதவி செய்யும் பொழுதும் அல்லது ஒருவருக்கு தானே தனது பணத்தை கொடுத்து உதவும் பொழுதும் அது திரும்பி வராத நேரத்தில் உதவி செய்தவர்கள் தான் பிரச்சனையில் மாட்டிக் கொள்கின்றனர். இவ்வாறான பிரச்சனையில் இருந்து விடுபட்டு உங்கள் பணம் விரைவில் உங்களை வந்தடைய இந்த பூவரசம் இலை பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதே இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இப்பொழுதெல்லாம் ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை நினைத்தாலே பயம் தான் வருகிறது. ஏன் என்றால் பாவம் என்று உதவி செய்யும் நேரத்தில் அதன் பலனாக நாம் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம். எனவே நெருங்கிய உறவினர்களுக்கும் கூட உதவி செய்ய யோசிக்க வேண்டியதாக உள்ளது.

இருந்தாலும் ஒருவர் கஷ்டம் என்று வந்து நிற்கும் பொழுது நமது மனசாட்சிக்கு நமக்கு வரக்கூடிய பிரச்சனையை பற்றி எல்லாம் யோசிக்காமல், அவர்களின் கஷ்டத்தை தீர்க்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. எனவே நம்மிடம் இருக்கும் நகையை கொடுத்தோ, அல்லது பிறரிடம் வட்டிக்கு கடன் வாங்கியோ அவர்களின் பிரச்சனையை முடிப்பதற்கு வழி செய்கின்றோம்.

ஆனால் சில நாட்களில் அவர்கள் வேண்டுமென்றோ அல்லது அவர்களின் சூழ்நிலையின் காரணமாகவோ இந்த கடனை திருப்பித் தர முடியாமல் போய்விடுகிறது. இதனை கேட்கச் சென்றால் நமக்கு அது இக்கட்டான சூழ்நிலையை கொடுத்துவிடுகிறது.

இவ்வாறான கடன்கள் திரும்பி வருவதற்கு பூவரச இலையை எடுத்து கொள்ளவேண்டும். அதில் நீங்கள் கடன் கொடுத்தவரின் பெயர் மற்றும் தொகையை எழுதி அதனை சுருட்டி வைக்க வேண்டும். பின்னர் ஒரு மூடி போட்ட டப்பாவில் முழுவதுமாக கல் உப்பை எடுத்துக் கொண்டு அதனுள் இந்த இலையை வைத்து விட வேண்டும்.
பிறகு இந்த டப்பாவை பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

நான் உழைத்து சம்பாதித்த பணம் எனது கையில் திரும்பி வரவேண்டும், நான் உதவி செய்தவரால் எனக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது இதிலிருந்து நான் விடுபட வேண்டும். என்று மனதார வேண்டிக்கொண்டு, இந்த டப்பாவை மற்றவர் கண் படாத இடத்தில் வைத்துவிட வேண்டும். இவ்வாறு மட்டும் செய்து பாருங்கள். விரைவில் உங்களின் பிரச்சனைக்கு தகுந்த முடிவு கிடைத்துவிடும். பிறகு இந்த கடன் திரும்பி வந்ததும் அந்த இலையையும், உப்பையும் மற்றவர் கால் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts