பிந்திய செய்திகள்

வீட்டின் பூஜை அறையில் இவை இருந்தால் தீராத துன்பம் வரும்!

ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை என்பது மிகவும் முக்கியமான இடமாகும். இந்த இடத்திலிருந்து தான் நமது மொத்த வீட்டிற்கும் தேவையான எதிர்மறை சக்தி கிடைக்கிறது. நாம் செய்யும் பூஜைகள் அனைத்தின் பலனாகவும் தெய்வங்கள் நமக்கு அருள் புரிந்து ஐஸ்வர்யம் உண்டாகிறது. இப்படி புனிதமான தெய்வங்களும், தெய்வங்களுக்கு தேவைப்படுகின்ற பொருட்களும் இருக்கின்ற இடம் எப்படி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும்.

ஒரு சிலருக்கு பூஜை அறையில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? எந்த பொருட்களை வைக்கக் கூடாது? பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் தெரிவதில்லை. இவ்வாறு அவர்களுக்கு தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளால் உண்டாகும் துயரங்கள் பற்றியும் புரிவதில்லை. எனவே இந்த பதிவில் பூஜை அறையில் வைக்கக் கூடாத பொருட்கள் என்னவென்று தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஒரு சில வீடுகளில் பூஜை அறைக்கென்று தனியாக இடம் இருக்காது. எனவே அவர்கள் சமையல் அறையில் பூஜை அறையை வைத்திருப்பார்கள். இப்படி அவர்களுக்கே இடம் பற்றாக்குறையாக இருப்பதால் அவர்கள் பூஜை அறையை இப்படி தான் வைக்க வேண்டும் என்ற வரைமுறை எதுவும் கிடையாது. முடிந்தவரை பூஜை அறையில் தேவையற்ற பொருட்களை வைக்காமல், பூஜை அறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பூஜை அறையை வாரத்திற்கு ஒரு முறை மட்டும் தான் சுத்தம் செய்ய வேண்டும் என்று கிடையாது. எப்பொழுதும் பூஜை அறை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். சுவாமி படத்திற்கு வைக்கப்படும் பூக்கள் மறுநாள் காய்ந்ததும் அவற்றை உடனே எடுத்து விட வேண்டும். ஏனென்றால் காய்ந்த இந்த மலர்கள் தெய்வத்திற்கு ஒரு பாரமாக அமைந்து விடும். எனவே இறைவனின் மனம் பாரமாக இருந்தது என்றால் நமக்கு உண்டாகும் பிரச்சனைகள் பல விதமாக இருக்கும்.

ஒரு சில வீடுகளில் பூஜை அறையை துடைப்பதற்கு என்று ஒரு கந்தல் துணியை வைத்திருப்பார்கள். அந்த துணி பெரும்பாலும் குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய உடையாக இருக்கலாம். இப்படி குழந்தையாகளின் ஆடையாகவே இருந்தாலும் கூட அது அவர்களின் உள்ளாடையாக இருக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல் இப்படி பூஜை அறையை சுத்தம் செய்யும் துணியை இறைவன் படத்திற்கு அருகிலேயே வைத்து விடக்கூடாது.

அடுத்ததாக பூஜை அறையை துடைப்பம் வைத்து சுத்தம் செய்யக்கூடாது. கைகளினால் துடைத்து எடுக்கலாம். அல்லது சிறிய துணி பயன்படுத்தி துடைத்து எடுக்கலாம். ஒரு சிலர் பூஜை அறையை சுத்தம் செய்வதற்கு என்று தனியாக துடைப்பம் வைத்திருப்பார்கள். இப்படி தனியாக துடைப்பம் பயன்படுத்தினாலும் அது சரியானதாக இருக்காது. இவ்வாறு செய்வது உங்களுக்கு தீராத துன்பத்தை மட்டும்தான் கொடுக்கும்.

அதுபோல தெய்வத்திற்கு தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் எண்ணெய் பாட்டிலை சுவாமி படத்திற்கு அருகிலேயே வைத்து விடக்கூடாது. இந்த எண்ணெய் பாட்டில் மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் கந்தல் துணி இவை அனைத்தையும் கண்களுக்கு தெரியாமல் தனியாக எடுத்து வைக்கவேண்டும். பூஜை செய்யும் பொழுது நாம் இறைவனை மட்டும் தான் தரிசிக்க வேண்டும். இப்படி அருகில் வேறு எந்த பொருட்களும் இருக்கக் கூடாது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts