பிந்திய செய்திகள்

பிரிந்தவர்கள் ஒன்று சேர, தொழிலில் சிறக்க இத் தீபத்தை ஏற்றி தவறாது வழிபடுங்கள்!

இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பம் என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. கணவன் மனைவி சேர்ந்து இருந்தால் அது கூட்டு குடும்பம் என்பது போலாகிவிட்டது. அதுபோல இன்றைய தலைமுறையினர் தனிமையை மட்டுமே விரும்புகின்றனர். எனவேதான் இவர்களுக்குள் சண்டை சச்சரவு அதிகமாக வருகிறது.

பெரியவர்கள் வீட்டில் இருந்தால் இவர்களுக்கு புத்திமதி சொல்லி இவர்களின் சண்டையை பெரிதாக்காமல் சுமூகமாக முடித்து வைப்பார்கள். ஆனால் இப்பொழுது உள்ள தலைமுறையினருக்கு கோபம் மட்டும் அதிகமாக இருக்கிறது.

நான் பெரியவனா? நீ பெரியவனா? என்ற எண்ணத்தில் ஒவ்வொருவரும் மாறி மாறி சண்டையிட்டு விவாகரத்து என்ற இடத்தில் வந்து நிற்கின்றனர். இதுபோல பிரிந்த கணவன் மனைவி தனித்தனியாக வாழ்ந்து பிள்ளைகளின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக மாற்றி விடுகின்றனர். இதுபோன்று பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், கூட்டுத் தொழில் செய்பவர்கள் இடையே நல்ல உறவு முறை நிலவவும் இந்த தீபத்தை மட்டும் ஏற்றினால் போதும். வாருங்கள் இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இப்பொழுதெல்லாம் படித்து முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது கடினமானதாக மாறி விட்டது. எனவே நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது ஒரு தொழில் தொடங்கி அதில் முன்னேற வேண்டும் என்பதற்காக, ஆளுக்கு ஒரு தொகையை சேர்த்து ஒரு தொழிலை உருவாக்குகிறார்கள். இதில் ஒரு சில சமயம் கருத்து வேறுபாடுகள் உண்டாகி சிக்கல்கள் ஏற்படும்.

இந்த சிக்கலை சுமூகமாக முடிக்கவும், இவர்களின் உறவு நல்ல முறையில் நிலைத்திருக்கவும் இந்த தீப பரிகாரத்தை செய்யலாம். அது போல ஒருவருக்கொருவர் விரும்பித் திருமணம் செய்ய முடிவு செய்து ஏதாவது ஒரு பிரச்சனையின் மூலம் திடீரென பிரிந்து விட்டால் அவர்கள் ஒன்று சேரவும் இதனை செய்யலாம்.

இதற்காக இரண்டு அகல் விளக்கு, இரண்டு பஞ்சு திரி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு அகல் விளக்கில் நெய்யையும், ஒரு விளக்கில் தேங்காய் எண்ணெயையும் ஊற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் இரு விளக்கிலும் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இதனை கோவில் அல்லது வீட்டின் பூஜை அறையில் செய்யலாம்.

பிறகு இந்த தீபத்தை பூஜை அறையின் முன்னர் ஒன்றுக்கொன்று எதிர் எதிர் திசையில் வைத்துவிட வேண்டும். ஆனால் இவற்றின் தீபம் தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக எறிய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்கு நல்ல பலன் கிடைக்கிறது.

அதுபோல சில கூட்டுக் குடும்பங்களில் மனக் குழப்பங்கள் ஏற்பட்டு இருந்தாலும், நான்கு அல்லது ஐந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து தொழில் தொடங்கி இருந்து அதில் ஏதேனும் சிக்கல் இருந்தாலும் இந்த பரிகாரத்தை இந்த முறையில் செய்ய வேண்டும். அதற்காக 3 அகல் விளக்கு, 3 பஞ்சு திரி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒவ்வொரு விளக்கிலும் தேங்காய் எண்ணெய், நெய் மற்றும் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு, மூன்று தீபத்தை ஏற்றி, அந்த தீபத்தின் சுடர் ஒன்றாக எரியும்படி வைத்துவிட வேண்டும். இந்த பரிகாரத்தை வாரம் ஒருமுறை தவறாமல் செய்துவர பிரச்சனை உண்டாகி இருக்கும் அனைவரிடமும் ஒற்றுமை பலப்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts