பிந்திய செய்திகள்

கஷ்டங்கள் நீங்கி, செல்வம் அதிகரிக்க எளிய கலச வழிபாடு!

கலச வழிபாடு செய்பவர்கள் பொதுவாக குடும்ப நலனுக்காகவும், சகல சௌபாக்கியங்களும் பெற வேண்டும் என்பதற்காகவும் மஹாலக்ஷ்மியை வேண்டி வழிபாடு செய்வார்கள்.

குடும்ப கஷ்டங்கள் நீங்கி வறுமை இல்லாமல், தன, தானியம் பெருக செய்யக்கூடிய இந்த எளிய வழிபாடு நம் முன்னோர்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வந்தனர். காலப்போக்கில் இதை எப்படி முறையாக கடைபிடிக்க வேண்டும்? என்பது பலருக்கும் தெரியாமல் போய்விட்டது.

எளிய மக்களும் செய்யக்கூடிய இந்த சக்தி வாய்ந்த கலச வழிபாடு அஷ்ட லக்ஷ்மிகளையும் வீட்டிற்கு அழைக்கும் அற்புத வழிபாடாகும். இந்த வழிபாட்டை எளிதாக முறையே எப்படி செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

அஷ்ட லக்ஷ்மிகளையும் அழைக்கும் இந்த கலச வழிபாடு செய்வதற்கு முதலில் ஒரு கலசம் தேவை. உங்கள் வீட்டில் பூஜைக்கு பயன்படுத்தும் பித்தளை, செம்பு அல்லது வெள்ளி போன்ற உலோகங்களால் ஆன கலசம் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

sembu-sombu

இது எதுவும் இல்லை என்றாலும் நீங்கள் மண் கலசத்தை பயன்படுத்தலாம். இதைத் தவிர்த்து வேறு எந்த ஒரு பொருளையும் பயன்படுத்த வேண்டாம். உலோகங்களுக்கு ஒவ்வொரு விதமான அதிர்வலைகளை உண்டு பண்ணும் சக்தி உண்டு. இந்த அதிர்வலைகள் தெய்வீக ஆற்றலை இழுத்துக் கொடுக்கும்.

கலசத்தை நன்கு சுத்தம் செய்து வெளப் பகுதி முழுவதும் மஞ்சள் குழைத்து தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒற்றைப்படை எண்ணிக்கையில் சுற்றிலும் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு கலசத்திற்குள் உங்களிடம் கங்கை தீர்த்தம் இருந்தால் கால் பாகம் அளவிற்கு விட்டுக் கொள்ளுங்கள்.மீதம் தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். கங்கை தீர்த்தம் இல்லாதவர்கள் பன்னீர் அல்லது சாதாரண தண்ணீர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பின்னர் அதனுள் சேர்க்க வேண்டிய முக்கிய பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். பணவரவை ஈர்க்கக்கூடிய அதீத சக்தி படைத்த பச்சை கற்பூரத்தை நுணுக்கி சேர்க்க வேண்டும்.

பச்சை கற்பூரம் தெய்வீக உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். பின்னர் அதனுடன் வாசனை மிகுந்த ஏலக்காய் மற்றும் கிராம்புகளை சேர்க்க வேண்டும்.

பின் மங்கள பொருட்களாக இருக்கும் மஞ்சள் மற்றும் குங்குமத்தை உங்கள் கைகளால் எடுத்து கொஞ்சமாக தூவி கொள்ளுங்கள். மஞ்சள், குங்குமத்தை அதிகம் சேர்க்கக்கூடாது, சிட்டிகை அளவுக்கு சேர்த்தால் போதும்.

பின்னர் அதனுடன் தானியங்கள் பெருக அன்னபூரணியின் அம்சமாக விளங்கும் பச்சரிசியை கொஞ்சமாக கையிலெடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். வறுமை இல்லாத வாழ்வு நிலைத்து இருக்க கட்டாயம் பச்சரிசி சேர்க்க வேண்டும்.

பின்னர் கலசத்திற்குள் வாசனை மிகுந்த பூக்களை வைக்க வேண்டும். சாமந்தி, மல்லிகை, ரோஜா, முல்லை போன்ற ஏதாவது ஒரு பூவை உள்ளே போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் பூஜை அறையை சுத்தம் செய்து அங்கு ஒரு மனையை விரித்து அதில் ஒரு வாழை இலையைப் போட்டுக் கொள்ளுங்கள்.

வாழை இலையின் மீது பச்சரிசியை பரப்பி கொள்ளுங்கள். அதன் மீது இந்த கலசத்தை வைத்து குடும்பத்தில் இருக்கும் அனைவரின் கைகளிலும் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைத்துக் கொண்டு மனதார அஷ்டலட்சுமிகளை நினைந்து பிரார்த்திக்க வேண்டும்.

பின்னர் உங்கள் கைகளில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை கலசத்திற்குள் போட்டு விடலாம். கலசத்தை தொட்டு வணங்கி விட்டு பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். அஷ்ட லட்சுமிகளுக்கும் மிகவும் விருப்பமான சர்க்கரை பொங்கலை நெய்வைதியம் படைக்கலாம்.

அது போல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரங்கள் உச்சரிக்கலாம். இது போல் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் செய்து வர எல்லா விதமான கஷ்டங்களும் நீங்கி, செல்வ வளம் பெருக துவங்கும் என்பது நியதி.

பூஜை முடிந்த மறுநாள் நாணயத்தை உங்கள் பார்சில் வைத்துக் கொள்ளுங்கள். கலச தீர்த்தத்தை செடிகளுக்கு ஓரமாக விட்டு விடுங்கள். இந்த எளிய வழி பாட்டை அனைவரும் கடைபிடித்து பயன் பெறலாமே.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts