பிந்திய செய்திகள்

காமதேனுவை வீட்டில் இப்படி வைத்து வழிபாடு செய்தால் உங்கள் வாழ்க்கையே மாறிவிடும்

பூஜை அறையில் முக்கியமாக வைத்திருக்க வேண்டிய பொருட்களின் பட்டியலில் கட்டாயமாக இந்த காமதேனுவுக்கு முதலிடம் என்று சொன்னால் அது மிகையாகாது. லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக்கூடிய, முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்யக்கூடிய இந்த காமதேனு படம் அல்லது சிலை வீட்டில் இருந்தால் சந்தோஷம் பால் போல பொங்கி வழியும்.

அதில் ஒரு துளி அளவும் மாற்றுக் கருத்து கிடையாது. இப்படிப்பட்ட அருமை பெருமைகளை கொண்ட காமதேனு வழிபாட்டை நம்முடைய வீட்டில் முறையாக எப்படி செய்வது என்பதை பற்றிய ஆன்மீக ரீதியான வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சில பேர் வீடுகளில் காமதேனுவின் சிறிய சிலை இருக்கும். சில பேர் வீடுகளில் சிலை இல்லை என்றாலும் பரவாயில்லை. படம் இருந்தாலும் அதை வைத்து காமதேனுவை வழிபாடு செய்யலாம். முடிந்தால் காமதேனு சிலையை வாங்குவதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஒரு சிலையை வாங்கி பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமை காலை இந்த காமதேனு பூஜையை உங்களுடைய வீட்டில் செய்ய வேண்டும். காலையில் எழுந்து வழக்கம்போல சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையை அலங்காரம் செய்துகொள்ளுங்கள். பூஜை அறையில் காமதேனு படத்தை அல்லது சிலையை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காமதேனு சிலைக்கு அபிஷேகம் செய்து, சுத்தம் செய்து சந்தனம் குங்குமப்பொட்டு இட்டுக் கொண்டு அதற்கு வாசம் நிறைந்த பூக்களால் அலங்காரம் செய்து விடுங்கள். படமாக இருந்தால் அதை துடைத்து பொட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு தாம்பூலத் தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது மஞ்சள், சந்தனம், குங்குமம், இந்த மூன்று பொருட்களையும் கொஞ்சமாக போட்டு தண்ணீர் ஊற்றி லேசாக கரைத்துக் கொள்ளுங்கள். காமதேனு சிலையை இந்த தட்டில் இருக்கும் தண்ணீரின் நடுவே வைத்து விடுங்கள்.

காமதேனு சிலைக்கு முன்பாக ஒரு வெண்தாமரை வைக்க வேண்டும். அதாவது காமதேனுவை நீங்கள் கரைத்து வைத்திருக்கும் மஞ்சள் சந்தன குங்கும தண்ணீரில் அமர வைத்து, அந்த சிலைக்கு முன்பு வெண்தாமரை வைத்து விடுங்கள். (உங்கள் வீட்டில் காமதேனு படம் இருந்தால் அந்த படத்தை சுவற்றில் சாய்ந்தபடி வைத்துவிட்டு, அந்த படத்திற்கு முன்பு இந்த தட்டை வைத்து விடுங்கள் அவ்வளவுதான்.)

உங்களுடைய கையில் வாசனை நிமிர்ந்த தாழம்பு குங்குமத்தை எடுத்துக்கொள்ளுங்கள். 108 முறை ‘ஸ்ரீ காமதேனு நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி உங்கள் கையில் வைத்திருக்கும் குங்குமத்தை எடுத்து காமதேனுவுக்கு முன்னால் இருக்கும் வெண் தாமரையில் போட வேண்டும்.

மந்திரத்தை உச்சரித்து முடித்துவிட்டு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். (பூஜை முடிந்த பின்பு அடுத்த நாள் காலை காமதேனுவை தட்டிலிருந்து எடுத்து பூஜை அறையில் வைத்துவிட்டு, தட்டில் இருக்கும் தண்ணீரை கால் படாத இடத்தில் கொட்டி விடலாம்.)

தாமரை பூவுக்கு நடுவே இருக்கக்கூடிய அந்த குங்குமத்தை தனியாக ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த குங்குமத்தை பெண்கள் தினந்தோறும் தங்களுடைய நெற்றியில் இட்டுவர வீட்டில் லட்சுமி கடாட்சம் குறைவே இருக்காது. பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வறுமை வீட்டை விட்டு துரத்தி அடிக்கப்படும். சுலபமான பூஜை தான் இது. பூஜைக்கு வெண்தாமரை மிக மிக முக்கியம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வாரம் வாரம் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று இந்த பூஜையை செய்யலாம். முடியாதவர்கள் மாதத்தில் ஒரு முறையாவது வீட்டில் இந்த கோபூஜை செய்து வந்தால் குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பூஜையை செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts