பிந்திய செய்திகள்

4 தவறுகள் வீட்டில் நடந்தால் அவ் வீட்டில் தெய்வங்களும், நிம்மதியும் தங்காது!!

அந்த காலத்திலிருந்து நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த பாடங்களை தான் இன்று நாம் திரும்பவும் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முன்னோர்கள் சொன்னபடி வாழ்ந்து வந்தோமே என்றால், இன்றைக்கு இந்த கஷ்டமான வாழ்க்கை நமக்கு இருந்திருக்காது. என்ன செய்வது. கலிகாலம், நமக்கு உண்டான கஷ்டத்தை நாம் அனுபவித்தே தீர வேண்டும்.

என்னதான் இது தவறு இதை செய்யாதே என்று நமக்கு நம்முடைய அப்பா அம்மா தாத்தா பாட்டி சொல்லி இருந்தாலும் அதை எல்லாம் மதிக்காமல் நாம் தனி வழியில் செல்கின்றோம். கூடவே கஷ்டமும் நம்மை பின் தொடர்ந்து வருகிறது. நம்முடைய வீட்டில் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்பதைப் பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால் இந்த பதிவில் தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்.

முதல் தவறு.

நம்முடைய உயிருக்கு உடல் எப்படி பாதுகாப்பு கவசமாக இருக்கின்றதோ, அப்படி தான் நம்முடைய வீட்டிற்கு சுவர்கள் பாதுகாப்பு கவசமாக இருக்கின்றன. எந்த வீட்டின் சுவரில் விரிசல் இருக்கின்றதோ, அந்த வீட்டில் கஷ்டங்கள் நிறைந்திருக்கும். எதிர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும்.

இதேபோல்தான் எந்த வீட்டில் சுவரில் பெயிண்ட் அல்லது சுண்ணாம்பு உதிர்ந்து சுவர் பழுதடைந்து இருக்கிறதோ, அந்த வீட்டிலும் கஷ்டங்கள் இருக்கும். அன்றே முன்னோர்கள் சொல்லி இருந்தார்கள். வருடத்திற்கு ஒருமுறை போகிப்பண்டிகை அன்று வீட்டிற்கு வெள்ளை அடித்து சுத்தம் செய்ய வேண்டும் என்று. இன்று நாம் அதை மறந்துவிட்டோம்.

இரண்டாவது தவறு.

ஒரு வீடு எப்போதும் இருள் சூழ்ந்து இருக்கக்கூடாது என்று சொல்லுவார்கள். சூரிய வெளிச்சம் வீட்டிற்குள் வர வேண்டும் என்று சொல்லுவார்கள். வீட்டில் வெளிச்சம் தரக்கூடிய விளக்கு பழுதடைந்து இருக்க கூடாது என்று சொல்லுவார்கள். அதாவது அந்த காலத்தில் வீட்டில் தீபம் ஏற்றாமல் இருட்டில் போட்டு வைக்கக்கூடாது என்று சொல்வார்கள்.

அந்த விளக்கு தான் இப்போது நமக்குப் பல்ப், லைட் ரூபத்தில் இருக்கின்றது. எந்த வீட்டில் எரியாத மின்விளக்குகள், ஏற்றப்படாத பூஜையறை விளக்குகள் இருக்கின்றதோ, அந்த வீட்டிலும் எதிர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்க வீட்ல பல்ப் ஃப்யூஸ் போயிடுச்சுன்னா உடனே மாத்திடுங்க.

மூன்றாவது தவறு.

தலை வாசல் கதவை வீட்டு தெய்வமாக பாவிக்க வேண்டும். எந்த வீட்டில் தலை வாசல் கதவு முறையாக பராமரிக்கப்பட்டு மங்கள கரத்தோடு இருக்கின்றதோ அந்த வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள். தலைவாசல் கதவு, தாழ்ப்பாள், சத்தத்தை எழுப்பவே கூடாது.

வீட்டில் சண்டை வந்துவிடும் என்பது நம்முடைய முன்னோர்களின் கூற்று. தலைவாசல் கதவும் மட்டுமல்ல, நம்முடைய வீட்டு படுக்கை அறை கதவு தாழ்ப்பாளில் கூட சத்தம் என்பது வரவே கூடாது. கீச்கீச் சத்தத்தோடு கதவு இருந்தால் அதை உடனடியாக சரி செய்து கொள்ளுங்கள்.

நான்காவது தவறு.

படுகையில் அமர்ந்து சாப்பிடவே கூடாது என்பது அந்த காலத்தில் நமக்கு நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்று காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு மூன்று வேளை உணவையும் படுக்கை அறையில் கட்டிலின் மேலே அமர்ந்து தான் சில பேர் சாப்பிடுகிறார்கள்.

இது மிக மிக தவறு. உங்கள் வீட்டு வரவேற்பறையில் கட்டில் இருந்தால் கூட, வரவேற்பறையில் பாய் போட்டு படுத்து இருந்தால் கூட அதன் மேலே அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.

மேலே சொல்லப்பட்டிருக்கும் அனைத்து விஷயங்களும் சாஸ்திர சம்பிரதாயங்களோடு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைய பட்டவை தான். கூடுமானவரை மேல் சொன்ன விஷயங்களை கடைப்பிடித்து வந்தால் நம் வீட்டில் நல்லதே நடக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts