பிந்திய செய்திகள்

அதி விரைவில் கடன் பிரச்சனை தீர பச்சை கற்பூரத்தை ஒருமுறை பயன்படுத்திப் பாருங்கள்!

யாருக்கு தாங்க கடன் இல்லை. உலகத்தில் மனிதராகப் பிறந்த நூற்றில் தொண்ணூற்று ஒன்பது பேருக்கு கடன் இருக்கிறது. ஆகவே கடனை கண்டு அனாவசியமாக பயப்பட வேண்டாம். கடன் கொடுத்தவர் வந்து கடனை கேட்டால், பயந்து ஒளிந்து வாழ வேண்டாம். உங்களுடைய நிலைமையை எடுத்துச் சொல்லுங்கள். கடன் கொடுத்தவரை எந்த நாளிலும் ஏமாற்றக் கூடாது என்ற உறுதி மொழியை மனதார எடுத்துக் கொள்ளுங்கள்.

நிச்சயமாக ஏதாவது ஒரு ரூபத்தில் அந்த ஆண்டவன் உங்களுக்கு நல்லதொரு வழியை காண்பித்து கொடுப்பான். நாம் என்ன ஆசைப்பட்டா கடனை வாங்கி பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றோம். நம்முடைய வறுமை, கெட்ட நேரம், நம்மை கடன் பிரச்சனையில் தள்ளி விடுகின்றது. ஆகவே, கடன் பட்டவர்கள் கலங்காமல் கம்பீரமாக கடனைத் திருப்பித்தர என்ன வழியோ அதைத் தேடுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

கடனால் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு தாந்திரீக ரீதியாக நிறைய பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பரிகாரம் மிக மிக சுலபமானது. ஆனால் இதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன் மிகப் பெரியதாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள்.

பச்சை கற்பூரம். நாம் எல்லோருக்கும் தெரியும். நேர்மறை ஆற்றல் நிறைந்தது. லட்சுமி கடாட்சம் கொண்ட ஒரு பொருள். இந்த பச்சை கற்பூரத்தை கடையிலிருந்து வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு மஞ்சள் நிற காகிதத்தில், பச்சைக் கற்பூரத்தில் உங்களுடைய கடன் அடைய வேண்டும் என்று எழுத வேண்டும்.

பச்சை கற்பூரத்தை கையில் பேனாவாக நினைத்து பிடித்துக்கொள்ளுங்கள். மஞ்சள் நிற காகிதத்தில் எனக்கு இருக்கக் கூடிய கடன் தீர வேண்டும் என்று எழுதுங்கள். உதாரணத்திற்கு ‘எனக்கு இருக்கக்கூடிய ஒரு லட்ச ரூபாய் கடன் சீக்கிரமே அடைய வேண்டும்’. என்று எழுதி அந்த காகிதத்தை மடித்து அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் சுவாமி படத்திற்கு பின்னால் வைத்து விடுங்கள்.

காகிதத்தில் எழுதி வைத்திருக்கும் அந்த பச்சைக்கற்பூரம் ஒரு சில நாட்களில் காற்றோடு காற்றாக கரைந்து போய்விடும். அந்த கற்பூரம் எப்படி கரைந்து போகிறதோ, அதேபோல உங்களுடைய லட்ச ரூபாய் கடனும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். கடன் கரையத் தொடங்கும். உங்களுக்கு வருமானம் கொஞ்சம் கொஞ்சமாக பெருகும். அந்த வருமானத்தை வைத்து நீங்கள் கடனை அடைப்பதற்கு தேவையான வழியை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக் கொடுக்கும்.

பொதுவாகச் சொல்லப்படும் பரிகாரங்கள் எல்லோருக்கும் உடனடியாக முழு பலனைக் கொடுக்கும் என்று சொல்லி விட முடியாது. அவரவர் ஜாதக கட்டம், அவரவருடைய தலையெழுத்து, என்று ஒன்று இருக்கிறது. ஆனால், சில பேருக்கு எதிர்பாராமல் வரக்கூடிய அதிர்ஷ்டம் எந்த பரிகாரத்தின் மூலம் வரும் என்று சொல்ல முடியாது. இந்த சுலபமான பரிகாரத்தை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு கடன் பிரச்சனை தீர்வதற்கு நிறையவே வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts