பிந்திய செய்திகள்

வாசலில் சாணம் தெளித்து மொழுகுவதன் பின்னணி என்ன தெரியுமா

நம் பாரம்பரிய வாழ்க்கை முறையின் படி நம் முன்னோர்கள், பல நெறிமுறைகளை வகுத்து வைத்து சென்றுள்ளனர். பழையதை மறந்து வருவதன் எதிரொலியாக பல எதிர்மறை ஆற்றல் பெருகி வருகின்றன என்பதை அனைவரும் உணரும் நிலையில் மாட்டு சாணம் போட்டு வீட்டு வாசலை தெளிக்க கூறியதன் உண்மை என்ன? கோலம் போடும் பொழுது பெண்கள் எந்த எண்ணத்துடன் கோலம் போட வேண்டும் தெரியுமா?

இந்த பிரபஞ்சம் முழுவதும் நல்ல அணுக்களும், விஷ அணுக்களும் பரவிப் படர்ந்துள்ளது. அதன் தன்மை நாம் வெளியில் செல்லும் பொழுது நம் பாதம் வழியாக உடலை அடைகின்றது. உடல் அது உணர்வின் வழியாக நுகர்ந்து நமக்குள் வலிமை பெற்று அதன் ஆட்சியை செலுத்த துவக்குகிறது. இதனால் குடும்பத்திற்குள் தேவையில்லாமல் கோபப்படுவது, ஆத்திரப்படுவது, சலிப்பு, சங்கடம், வலி, வேதனை என்ற பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டி இருக்கிறது.

மாட்டின் சாணத்தில் இது போன்ற விஷயங்களை அழிக்கக் கூடிய ஆற்றல் நிறைந்து உள்ளது என்பதால் இதனை வீட்டு வாசலில் காலையில் மொழுக சொல்லிக் கொடுத்தனர். மாடு புல்லை உட்கொள்ளும் பொழுது இந்த பிரபஞ்சத்தின் விஷத்தன்மையை தன்னுடைய உடலாக மாற்றிக் கொள்கிறத, அதன் பின்பு தான் நல்ல விஷயங்களை சாணமாக வெளியிடுகின்றது. இதனால் இந்த சாணத்தில் தீய விஷக்கிருமிகளையும், தீய சக்திகளையும் அழிக்கக் கூடிய ஆற்றல் செழித்து காணப்படுகிறது.

இடையர்தவணை - Edayarthavanai - வாசலில் கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள்  தெரியுமா? *************************************************** கோலமிடும்  வீட்டில் மகாலெஷ்மி ...

எனவே சாணத்தை அதிகாலையில் வீட்டு வாசலில் தெளித்து கோலம் போட்டால் அதை மிதித்துக் கொண்டு உள்ளே வரும் போது நம் பாதம் வழியாக சென்ற தீயசக்திகள் அழிந்து நம்மிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி விடும். இதனால் மேற்கூறிய எந்த விதமான எதிர்மறை உணர்வுகளையும் நாம் அதிகமாக வெளிப்படுத்தவும் மாட்டோம், இதனால் குடும்பத்தில் ஒற்றுமை எப்போதும் நிலைத்து இருக்கும். குடும்ப உறவுகளுக்குள் பாசமும், பற்றும் காற்றுப் போகாமல் மகிழ்ச்சியுடன் இருக்க பெண்கள் கோலம் போடும் பொழுது நல்ல சிந்தனையுடன் கோலம் போட வேண்டும்.

ஒரு திருமணமான பெண் கணவனை மட்டுமல்லாமல் அவனது குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் சேர்த்து அனுசரித்து அமைதியாக பல்வேறு கட்டங்களை தாண்டி போக வேண்டி இருக்கிறது. இதனால் அடிக்கடி மன உளைச்சலில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு காலையில் கோலம் போடும் பொழுது சரியாக கோலம் போட வருவதில்லை. மனம் உளைச்சலில் இருக்கும் பொழுது அழித்து அழித்துக் கோலம் போடுவார்கள். மேலும் புள்ளி நேராக வைக்கவும் அவர்களால் முடியாது.

పేడ - தமிழ் விக்சனரி

மனதளவில் மகிழ்ச்சியாக இருக்கும் குடும்ப பெண்கள் கோலம் போடும் பொழுது நேர்த்தியாக புள்ளி வைத்து சர சரவென இழுத்து அழகிய வண்ண கோலத்தை வரைந்து விடுவார்கள். குனிந்து, நிமிர்ந்து விரல்களால் கோலத்தை எடுத்து புள்ளிகள் வைக்கும் பொழுது கோலத்தில் இருக்கும் காந்தப்புலன் பெண்களின் அந்த கெட்ட எண்ணங்களை ஈர்த்துக் கொள்ளும். இதனால் அவர்களுக்குள் இருக்கும் வெறுப்பு மறைந்து அமைதியை கடைப்பிடித்து குடும்ப ஒற்றுமையை கட்டி காப்பார்கள். அவர்களுடைய ஆரோக்கியமும் அதிகரிக்கும். இதனால் பாரம்பரிய வாழ்க்கை முறையின் அவசியத்தை உணர்ந்து நாம் அதன் வழியில் நடப்பது மிகவும் நல்லது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts