பிந்திய செய்திகள்

உங்கள் வீட்டில் குப்பைத்தொட்டி இருந்தால் முதலில் இதை செய்யுங்கள்

நம் வீட்டில் எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் மஹாலக்ஷ்மி ஆனவள் நாம் கூப்பிடாமலேயே நம் வீட்டில் வந்து நுழைந்து விடுவாள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. அப்படி இருக்க நம் வீட்டில் இருக்கும் இந்த குப்பை கொட்டும் குப்பைத் தொட்டி எப்படி வைத்திருக்க வேண்டும்?தெரியுமா?

நம் வீட்டில் இருக்கும் போது ஒவ்வொரு பொருட்களுக்கும், ஒவ்வொரு வகையான ஆற்றல்களை வெளியிடும் தன்மை உண்டு. இந்த பிரபஞ்சம் முழுவதும் தீய ஆற்றல்களும், நல்ல ஆற்றல்களும் சேர்ந்து தான் பயணிக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது நாம் உபயோகப்படுத்தும் பொருட்களிலும் அப்படித்தானே இருக்கும்? இதனால் தான் ஒவ்வொரு விஷயத்திலும் திசை பார்த்து, நாள் பார்த்து, நேரத்தை பார்த்து அந்த காலத்தில் பயன்படுத்தி வந்தனர்.

கடிகாரம் மாட்டும் திசை முதல், பீரோ வைக்க கூடிய அமைப்பு முதல், துடைப்பத்தை வைக்கும் முறை வரை அனைத்திலும் ஒரு சாஸ்திரம் நுழைந்துள்ளது. இந்த சாஸ்திரம் படி நாம் வைக்கும் பொழுது அதற்குரிய ஆற்றலை வெளிப்படுத்தி நமக்கு நன்மைகளை கொடுக்கின்றன என்றே நம்பப்படுகிறது. அந்த வகையில் குப்பைத் தொட்டி எப்பொழுதும் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.

எல்லோருடைய வீடுகளிலும் கண்டிப்பாக குப்பைகளை சேகரிக்க ஒரு குப்பைத்தொட்டி இருக்க வேண்டியது அவசியமாகும். இப்போதெல்லாம் மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று பிரித்து கொடுக்குமாறு அரசாங்கம் வலியுறுத்துகிறது. இதற்காக 2 குப்பைத் தொட்டிகளை கூட வைத்திருக்கிறார்கள். எத்தனை குப்பைத் தொட்டிகள் வைத்து இருந்தாலும் பரவாயில்லை, அத்தனையும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனம் தேவை.

குப்பையை கொட்டும் குப்பைத் தொட்டி தானே என்று அலட்சியமாக இருந்தால் உங்கள் வீட்டில் தரித்திரமும், பிடையும் தலைவிரித்து ஆட துவங்கி விடும். குப்பைத் தொட்டியில் இருக்கும் கழிவுகளை அவ்வப்போது அகற்றி தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும். ஒரு சில வீடுகளில் எல்லாம் குப்பையை கொட்டி விட்டு வந்தவுடன் தண்ணீரை விட்டு அலசி கவிழ்த்து வைத்து விடுவார்கள். இவர்களுடைய இல்லத்தில் எப்போதும் மகிழ்ச்சிக்கு குறைவில்லாமல், செல்வ வளம் பெருகும்.

ஆனால் பெரும்பாலும் குப்பைத்தொட்டியை வாரம் ஒரு முறை கூட சுத்தம் செய்யாமல் அப்படியே மாதக்கணக்கில் கூட விட்டு வைப்பது உண்டு. அதில் சேர்ந்து இருக்கும் அழுக்குகள் மூலம் நம் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் பரவ துவங்கும். சாக்கடை கழிவுகள், தேங்கி இருக்கும் கெட்ட தண்ணீர், இதுபோல குப்பை கூளங்கள் மூலமாக சனி பகவான் நம்மை பீடித்துக் கொள்கிறார் எனவே குப்பை தானே என்று அலட்சியமாக நினைத்து விடாமல் குப்பைத் தொட்டியையும் அவ்வப்போது சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் தேவையற்ற தரித்திரங்கள் நம் வீட்டில் நுழையாமல் பாதுகாப்பாக இருக்கலாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts