பிந்திய செய்திகள்

வீடு லட்சுமி கடாட்சத்துடன் இருக்க பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை!

ஒரு வீட்டின் பாரம்பரியம் என்பது அந்த வீட்டுப் பெண்களின் பழக்கவழக்கத்தை பொருத்தே அமைகிறது. நமது முன்னோர்கள் முதல் இன்று வரையில் ஒரு வீட்டின் பராமரிப்பு மற்றும் பொருளாதார பொறுப்புகள் அனைத்தும் பெண்களிடம் தான் ஒப்படைக்கப் படுகிறது.

அவ்வாறு பெண்கள் என்பவர்கள் பொறுமையிலும், பொறுப்புடனும் இருப்பதில் சிறந்த வல்லவர்களாவர். ஒரு குடும்பத்திற்கு மூன்று வேளை உணவு சமைத்து மற்றவர்கள் பசியாற உணவளிக்கும் இந்த பெண்கள் அன்னபூரணியாகவே பார்க்கப்படுகிறார்கள்.

பொதுவாக ஒரு வீட்டின் நடமாடும் மகாலட்சுமியாக பெண்கள் இருக்கின்றனர். எனவே வீட்டுப் பெண்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருந்தால் அந்த வீடும் மிகுந்த மகிழ்ச்சியுடன், ஆனந்தமாக ஐஸ்வர்யத்துடன் இருக்கும்.

இவ்வாறு ஒரு குடும்பத்தின் அனைத்து வித ஐஸ்வர்யங்களும் வீட்டில் உள்ள பெண்களை பொருத்தே அமைகிறது. எனவே வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களும் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத செயல்களை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பெண்கள் எப்பொழுதும் காலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, மிகவும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் காலை எழுந்தவுடன் அவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் மங்களகரமாகவும், எதிர்மறையான தாகவும், மற்றவர்களை உற்சாகப்படுத்த கூடியதாகவும் இருக்க வேண்டும். இதை தவிர்த்து அவர்கள் பேசும் வார்த்தைகள் எதிர்மறையாக இருந்தால் அன்றைய பொழுது அந்த வீட்டில் ஏதேனும் தீய விஷயங்கள் நடைபெற வாய்ப்பிருக்கும்.

இப்படி இல்லாமல் பெண்கள் காலையில் தாமதமாக எழுந்து சோம்பேறித்தனமாக அமர்ந்திருந்தால், அந்த வீடு முழுவதுமே அன்றைய தினம் சோம்பலாக இருக்கும். இவ்வாறு இருப்பதை வழக்கமாக வைத்திருந்தால் உங்கள் வீட்டில் எப்போதும் தரித்திரம் மட்டுமே நிலவிக் கொண்டிருக்கும். வீட்டுப் பெண்கள் எந்த அளவிற்கு சுறுசுறுப்பாக இருக்கிறார்களோ அந்த அளவிற்கு வீட்டிலுள்ள மற்ற வேலைகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று ஐஸ்வரியம் பெருகும்.

அவ்வாறு காலையில் எழுந்து குளித்து, நெற்றியில் குங்குமம் வைத்து, அதன் பின்னர் பூஜை அறைக்குச் சென்று, தீபமேற்றி வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் தினமும் காலை மற்றும் மாலையில் ஒரு விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் நமது வீடு எப்போதும் லட்சுமி கடாட்சத்துடன் இருக்கும்.

அதுபோல சமையலறையில் பயன்படுத்தும் உப்பு ஜாடியில் உப்பை எடுக்கும் போது பலரும் கைகளை பயன்படுத்தி எடுக்கின்றனர். இவ்வாறு செய்வது வீட்டிற்கு தரத்தை மட்டுமே கொடுக்கிறது. இதனால் இதனை தவிர்த்து உப்பு எடுக்கும் பொழுது அதில் ஒரு ஸ்பூன் போட்டு வைத்து, அதனை பயன்படுத்தி உப்பை எடுக்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும் உப்பு கீழே சிதறாமல் இருக்க வேண்டும். உப்பை சிதறவிட்டால் பண விரயம் அதிகமாகும்.

அதுபோல செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருக்கும் எந்த ஒரு பொருட்களையும் வெளியில் தூக்கிப் போடக் கூடாது. அது மட்டும் அல்லாமல் மற்றவர்க்கு தானமாக கொடுப்பதாக இருந்தாலும் வெள்ளி, செவ்வாய் தவிர மற்ற தினங்களில் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அது மட்டுமல்லாமல் வெள்ளி, செவ்வாய்க் கிழமையில் சென்று இறைவனை வணங்கிவிட்டு அங்குள்ள முதியவர்களுக்கு சாப்பிட உணவு வழங்குவது மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts