பிந்திய செய்திகள்

நீங்கள் மறைக்க நினைக்கும் இந்த 3 விஷயங்களை மறைக்கலாமா? கூடாதா?

ஒவ்வெரு மனிதனாலும் எந்த ஒரு விஷயத்தையும் தனக்குள் மட்டுமே ரகசியமாக நீண்ட நாட்களுக்கு பூட்டி வைக்க முடியாது. அது மனதை அழுத்தி என்றாவது ஒரு நாள் வெளியில் சொல்லி விட மாட்டோமா? என்று தோன்றும். இப்படி நமக்குள் இருக்கும் ரகசியங்களில் இந்த 3 ரகசியங்கள் மற்றவர்களுக்கு சொல்லலாமா? கூடாதா? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்

புராணத்தில் அரிச்சந்திரன் பொய்யே சொல்ல மாட்டான் என்று கதைகளாக கூறக் கேட்டிருப்போம். ஆனால் இந்த கலியுகத்தில் நீங்கள் பொய்யே சொல்லாமல் இருந்தால், உங்களை வாழவும் விட மாட்டார்கள், சாகவும் விடமாட்டார்கள். இடம், பொருள், ஏவல் பார்த்து யாரிடம் என்ன சொல்ல வேண்டுமோ? அதை மட்டுமே சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

ஏதாவது ஒன்றை தேவையில்லாத ஒருவரிடம் நீங்கள் உலறி விட்டால் போதும், அது பல வகைகளில் சுற்றித் திரிந்து உங்களுக்கே ஆபத்தாக வந்து முடிந்துவிடும். பல சான்றோர்களும், அறிஞர்களும் பட்ட அவமானங்களை மற்றவர்களிடம் சொல்ல கூடாது என்று கூறுவார்கள். ஆனால் உண்மையிலேயே நீங்கள் ஜெயித்து வளர்ந்த பின்பு, பட்ட அவமானங்களை சொல்லும் பொழுது தான் அதே நிலையில் இருக்கும் மற்றவர்களுக்கு அது உந்துகோலாக இருக்கும். எனவே நீங்கள் பட்ட அவமானங்களை வெளியில் சொல்லாமல் மறைக்க கூடாது.

குடும்பத்தினருக்கு தெரிந்த விஷயங்கள் அனைத்தும் நண்பர்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை! அதே போல நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும் விஷயங்களை குடும்பத்தினருக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை, யாருக்கு என்ன தெரிய வேண்டும்? அது தெரிந்தால் போதும். நான் உண்மையாக இருக்கிறேன் என்கிற பெயரில் உளறிக் கொட்டினால், உள்ளதும் உங்கள் கையை விட்டு சென்றுவிடும்.

கற்ற கல்வியை அல்லது கலையை நீங்கள் மட்டுமே தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பது உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, இந்த சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும். கலை, கல்வி போன்றவை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது எனவே அதை நீங்கள் மறைத்து வைத்துக் கொண்டிருந்தால், அது சமுதாயத்திற்கு மிகப் பெரிய நஷ்டம் ஆக அமையும் எனவே தயக்கம் காட்டாமல் உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு மறைக்காமல் கற்றுக் கொடுக்க வேண்டும்

உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அதை கண்டிப்பாக மறைத்துக் கொண்டு பொய்யாக இன்னொருவரிடம் நடித்துக் கொண்டு பிடித்தது போல் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. பிடிக்கவில்லை என்பதை எப்படி முகத்தில் அறைந்தது போல ஒருவரிடம் சொல்ல முடியும்? என்று தயக்கம் காட்டி, நீங்கள் பிடித்தது போல நடிப்பது அப்போதைய சூழ்நிலையை சரி செய்யுமே தவிர, பின்னாளில் நீங்கள் அவர்களுக்கு செய்யும் துரோகமாகவே அது மாறிவிடும். எனவே உங்களுக்கு நிஜமாகவே ஒருவரை பிடிக்கவில்லை என்றால், அவர்களிடம் பேச உங்களுக்கு விருப்பமில்லை என்றால் அதனை நாசுக்காக அவர்களிடம் சொல்லி விட்டு விலகுவது மிகச் சிறந்த செயலாகும். அவர்கள் என்ன நினைப்பார்கள்? என்பது உங்களுக்கு தேவையில்லாத விஷயம். எல்லோருக்கும் எல்லோரும் உண்மையாக இருந்து விட முடியாது. சிலரிடம் நட்பையும், சிலரிடம் வெறுப்பையும் சம்பாதித்து தான் நம்மால் நிம்மதியாக வாழ முடியும் என்றால் அதையும் செய்து தான் ஆக வேண்டும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts