பிந்திய செய்திகள்

வாகனத்தின் மீது காக்கை வந்து தானாக மோதுவதன் காரணம் என்ன?

பறவை இனங்களில் மிகவும் அதிகமாக காணப்படுவது காக்கை! இந்த காக்கை ஹிந்து மதம் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு சமயங்களில் ரொம்பவே பெருமைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. காக்கை மனிதர்களுக்கு பலவிதங்களில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

சேர்ந்து உண்ணுதல், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை என்று மேன்மை குணங்களை கொண்டுள்ள இந்த காகம் சில சமயங்களில் அடிக்கடி தானாக வாகனத்தில் போய் மோதிக் கொள்வதைப் பார்த்து இருப்போம். இது எதனால்? இதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் சுவாரஸ்யமாக காண இருக்கிறோம்.

ஒரு காகம் சுமார் நான்கு வருட காலம் வரை உயிர் வாழும் தன்மை உடையது. பெண் காகம், ஆண் காகத்துடன் சேர்ந்து கருவுற்ற பின்பு முட்டையிட்டு கூட்டில் அடைகாக்க தொடங்கும். இந்த அடை காக்கும் காலத்தில் பெண் காக்கை, கூட்டை விட்டு எங்கும் செல்லாது. இதற்கு உணவு கொடுக்க ஆண் காக்கை மட்டுமே கூட்டிற்கு வந்து செல்லும்.

நாற்பது நாட்கள் வரை அடைகாத்து பின்னர் தன்னுடைய குஞ்சு காக்கையை தானே பராமரிக்க செய்யும். இந்த அடை காக்கும் 40 நாட்களில் கொஞ்சம் கூட பெண் காக்கை தண்ணீர் அருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

40 நாட்கள் அடைகாத்த பிறகு சிறகு முளைக்கும் வரை பெண் காகம் மட்டுமே அவற்றை பராமரிக்கும். இந்த சமயத்தில் பெண் காக்கை ஆண் காகத்தை முற்றிலுமாக வெறுத்து விடும். கூட்டிற்கு அருகே ஆண் காகம் வந்தாலே அது கொத்தி கொத்தி விரட்டி அடிக்கும்

ஆண் காக்கையை, பெண் காக்கை வெறுத்து விடுவதால் ஆண் காக்கை விரக்தியின் எல்லைக்குச் செல்லும். பெண் காக்கை அதன் பிறகு ஆண் காக்கையுடன் இணையாது. இதனால் ஆண் காக்கைக்கு கடைசியில் தனிமை உண்டாகிறது.

இந்த தனிமையை ஏற்க முடியாமல் ஆண் காக்கை கொஞ்ச காலம் சுற்றித் திரிந்து ஏதாவது ஒரு மரக்கிளையில் அல்லது வாகனங்களில் தன்னைத் தானே மோதிக் கொண்டு காயப்படுத்தி இறந்துவிடும். அல்லது மின்சார கம்பிகளில் மோதி தற்கொலை செய்து கொள்ளும்.

இது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஒரு காகத்தின் வாழ்க்கையாகும். இதனால் நாம் சில சமயங்களில் வாகனம் ஓட்டும் பொழுது திடீரென நம் வாகனத்தின் மீது அவை மோதுவதை பார்க்க நேரிடுகிறது. இதை அபசகுனமாக கருதாமல் இருப்பது மிகவும் நல்லது. பறவை இனங்களில் காகத்திற்கு இந்து சமயத்தில் மிகப் பெரிய பங்கு உண்டு.

காகத்தை பித்ருக்களாக நினைத்து வழிபட்டு வரும் இந்துக்களுக்கு அதன் மீது ஒரு தனி பிரியம் உண்டு. காகம் அசைவத்தை சாப்பிட்டாலும், பித்ருக்களாக நினைத்து நாம் சாதம் வைக்கும் பொழுது அசைவத்தை பயன்படுத்தக் கூடாது.

பித்ரு வழிபாடு செய்யும் பொழுது காக்கைக்கு எச்சில் படாத உணவை மட்டுமே படைக்க வேண்டும். நாம் சாப்பிட்ட பிறகு அந்த சாப்பாட்டை காக்கைக்கு பித்ரு கடன் செலுத்தக் கூடாது. சாப்பிடுவதற்கு முன்னர் காக்கைக்கு படைத்து பின்னர் சாப்பிடுவது தான் முறையானது.

காக்கை கரைவது, காக்கை கொத்துவது போன்றவை சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பதாகவும் ஜோதிடம் கூறுகிறது. இப்படி காகத்தை வைத்து பல்வேறு விஷயங்கள் கூறினாலும், அதன் வாழ்க்கை என்னவோ இவ்விதமாக அமைந்துவிட்டது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts