பிந்திய செய்திகள்

வாழ்க்கையில் ஜெயித்து கொண்டே இருக்க வேண்டுமா? இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக்கொள்ளுங்கள்

முயற்சியை வெற்றி அடைய வைக்க வசீகரத் தன்மை தேவை. அதாவது அடுத்தவர்களை ஈர்க்கக் கூடிய தன்மை என்பது நம்மிடத்தில் இருக்க வேண்டும். நாம் போய் ஒரு இடத்தில் நின்றோமே ஆனால், நாம் கேட்காமலேயே நமக்கு என்ன உதவி வேண்டுமோ அதை எதிரே நிற்பவர்கள் செய்ய வேண்டும். இந்த வசீகரத் தன்மை சில பேருக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். சிலருடைய முகத்தில் இந்த வசீகரத் தன்மை என்று சொல்லப்படும், வசிய சக்தி கொஞ்சம் குறைவாக இருக்கும்.

நான் எங்கு சென்றாலும் எனக்கான மதிப்பும் மரியாதையும் கிடைக்க படுவதே இல்லை‌. என்னுடைய முகம் பொலிவாக இல்லை. கலையாக இல்லை. எனக்கான அங்கீகாரம் எந்த இடத்திலும் நிலைப்பது கிடையாது. என்று சில பேர் கவலைப்படுவார்கள். அழகு என்பது வேறு. பொலிவு என்பது வேறு. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். வெள்ளையாக இருப்பது அழகு கிடையாது. தெய்வ கடாட்சத்துடன் பார்த்த உடனேயே இரண்டு கையெடுத்து கும்பிடும் அளவிற்கு நம்முடைய முகம் கலையாக இருப்பது தான் அழகு.

சரி, இந்த வசீகரத் தன்மை பெறுவதற்கு ஆன்மீக ரீதியாக நாம் என்ன செய்யலாம். இந்த ஒரு திலகத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். வசிய திலகத்தை தயார் செய்ய திருநீற்றுப் பச்சை இலை, துளசி இலை, புனுகு இந்த 3 பொருட்கள் நமக்கு தேவைப்படும். திருநீற்றுப் பச்சிலையை நசுக்கினால் அதிலிருந்து லேசாக சாறு கிடைக்கும். துளசி இலையையும் இப்படி நசுக்கினால் அதிலும் லேசாக சாறு வரும். இந்த 2 சாறுடன் ஒரு சொட்டு புனுகு சேர்த்து குழைத்து உங்களுடைய நெற்றியில் இட்டுக்கொள்ள

தினம்தோறும் இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக்கொண்டாலும் நல்ல பலனை பெற முடியும். அப்படி இல்லை என்றால் வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை அன்று இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். உங்களுடைய குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளும் போது உங்களுடைய முகம் பொலிவு பெறுவதோடு வசீகரிக்கும். ஆண் பெண் இருவரும் இந்த திலகத்தை பயன்படுத்தலாம்.

நீங்கள் வெளியே செல்லும் போது உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் கூடும். நீங்கள் புதியதாக தொடங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இந்த தாந்திரீக ரீதியான பரிகாரத்தை நல்ல விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். கெட்ட எண்ணத்தோடு இந்த மூன்று பொருட்களை வைத்து, அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அது நடக்காது. ஒருவேளை நீங்கள் அடுத்தவர்களுக்கு தவறு செய்ய முயற்ச்சித்தால் அதற்கான பாவம், உங்கள் தலைமுறையை வந்து சேரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீங்கள் முக்கியமாக ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்காக வெளியில் செல்கிறீர்கள் என்றால், அப்போது கட்டாயம் இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொண்டு செல்லுங்கள். நீங்கள் நினைத்தது நிச்சயம் நினைத்தபடி நடக்கும். உதாரணத்திற்கு இன்டர்வியூக்கு போறீங்க, பொண்ணு பாக்க போறீங்க, புதியதாக தொழில் தொடங்க அக்ரிமென்டில் சைன் பண்ண போறீங்க, சொத்து வாங்க போறீங்க, தங்கம் வாங்க போகலாம். இப்படி நல்ல விஷயங்களுக்கு செல்லும் போதெல்லாம் இந்த திலகம் உங்கள் நெற்றியில் இருந்தால் வெற்றி உங்கள் பக்கம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts