பிந்திய செய்திகள்

மாலை நேர விளக்கேற்றிய பிறகு தவறியும் நீங்கள் செய்யக் கூடாத விஷயங்கள்

வாழ்க்கை என்றால் அதில் இன்பமும், துன்பமும் கலந்தே இருக்கும். அவற்றை வென்று தான் வாழவேண்டும். கஷ்டத்தில் இருக்கும் பொழுது இறைவனிடம் வேண்டுதல் வைத்து, பல பரிகாரங்கள் செய்தும் பலனில்லையே என்றும், எனக்கு மட்டும் ஏன் இப்பயெல்லாம் நடக்கிறது? எனது பிரச்சனைக்கான தீர்வு கிடைக்க வில்லையே? என்று புலம்பி கொண்டிருப்பார்கள். ஆனால் என்ன தான் பூஜைகள் செய்தாலும், அதனை முறையாக செய்வதுடன் மட்டுமல்லாமல் நாம் செய்யக்கூடாத விஷயங்கள் என்னவென்றும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் சிறு சிறு தவறுகளால் உங்கள் அதிர்ஷ்டத்தை நீங்களே வெளியில் அனுப்பி விடுகிறீர்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் தவறுகள் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே பலரது வீடுகளிலும் மாலை நேரத்தில் விளக்கேற்றி பூஜை செய்வது வழக்கமான ஒரு விஷயம் தான். இவ்வாறு மாலை நேரத்தில் உங்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றிய பின் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களுக்கான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவ்வாறு நீங்கள் உங்களை அறியாமல் செய்யும் தவறுகள் சில இருக்கின்றன.

பெண்கள் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றிய பிறகு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். ஒரு சில பெண்கள் பூஜை செய்த பிறகு பக்கத்து வீட்டிற்கு சென்று பேசிக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு மற்றவர்கள் வீடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்க இருந்தால், அதாவது கோவிலுக்கு செல்வது, மங்களகரமான விசேஷங்களுக்கு செல்வது இது போன்ற காரியங்களை செய்யலாம்.

ஏனென்றால் நீங்கள் விளக்கேற்றி பூஜை செய்வது மகாலட்சுமி தாயை வீட்டிற்கு அழைப்பதற்கான செயல் ஆகும். அப்படி மகாலட்சுமி தாயார் வீட்டிற்கு வருகின்ற நேரத்தில் நீங்கள் வீட்டில் இல்லாமல் இருந்தால் வருகின்ற மகாலக்ஷ்மி தேவி அப்படியே திரும்பி சென்று விடுவார்கள். அடுத்ததாக விளக்கேற்றிய பிறகு எந்த விதமான துன்பமாக இருந்தாலும் உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் வரக்கூடாது.

நமது வீட்டிற்கு வரும் உறவினர்களையோ, நண்பர்களையோ எப்படி இன்முகத்துடன் வரவேற்கிறோமோ, அதுபோல மகாலட்சுமி தாயார் வீட்டிற்குள் நுழையும் பொழுது நமது மகிழ்ச்சிகரமான முகத்தை தான் பார்க்கவேண்டும். அவர்கள் வரும்பொழுது உங்கள் முகம் சோகமாகவும், வருத்தமாகவும் இருந்தது என்றால் நிச்சயம் மகாலட்சுமி தேவி நமது வீட்டிற்குள் நுழைய மாட்டார்கள்.

அடுத்ததாக மாலை நேரம் விளக்கு வைத்த பிறகு மங்களகரமான பொருட்கள் எதனையும் அடுத்தவருக்கு இரவலாக கொடுக்கக்கூடாது. ஒரு சிலர் பால், தயிர் போன்ற பொருட்களை இரவலாக கேட்பார்கள். அவர்களிடம் ஏதாவது காரணம் சொல்லி கொடுக்காமல் தவிர்த்துவிட வேண்டும். ஏனென்றால் வீட்டிற்குள் வரும் மகாலட்சுமி தேவி இப்படி மங்களகரமான பொருட்களில் சென்றுதான் அமர்வார்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts