பிந்திய செய்திகள்

கண்ணுக்கு தெரியாத எதிரிகள் கூட உங்களை விட்டு ஓட இதை செய்யுங்கள்!!

என்னதான் நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று உங்கள் குடும்பத்தையும், உங்கள் முன்னேற்றத்தையும் கவனித்துக் கொண்டிருந்தாலும்,ஒருவர் சுகமான வாழ்வு வாழ்வது மற்றவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத பொறாமையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு மற்றவர்களின் பொறாமை எண்ணம் உங்களை எளிதில் வீழ்த்த வல்லது. கண்ணுக்கு தெரிந்த எதிரிகளை உங்கள் வலிமையினால் வென்று விட முடியும். ஆனால் இதுபோன்ற கண்ணுக்கு தெரியாத எதிரிகளால் உண்டாகும் வீழ்ச்சியை நீங்கள் வெல்ல முடியாது. எனவே ஒன்பது வாரங்கள் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். உங்கள் எதிரிகள் மீண்டும் உங்கள் பக்கம் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள். வாருங்கள் இது என்ன பரிகாரம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இன்றும் அமாவாசை என்றால் அனைவரது வீட்டிலும், தொழில் செய்யும் இடங்களிலும் பூசணிக்காய் சுற்றி உடைப்பது வழக்கமாக இருக்கிறது. ஒரு சிலர் இது என்ன மூடநம்பிக்கை என்றும் ஏளனமாக பார்ப்பதுண்டு. அவ்வாறு வீட்டின் வாசலில் வெள்ளிக்கிழமையில் எலுமிச்சை பழத்தை இரண்டாக அரிந்து, அதில் மஞ்சள், குங்குமம் வைத்து நிலைகளிலும் வைப்பதும் பழக்கம் தான்.

அதுபோல நிலை வாசலில் எலுமிச்சை பழம், கரித்துண்டு, பச்சை மிளகாயை நூலில் கோர்த்து கட்டி தொங்க விடுவதும், வாசலில் ஆகாய கருடன் கிழங்கு, கற்றாழை போன்றவற்றை கட்டி தொங்க விடுவதும் பலரின் நம்பிக்கைகளில் ஒன்றாகும். இவற்றின் மூலம் தங்களை தீயவினைகள் எதுவும் நேருங்காது என்றும், தங்கள் குடும்பம் நலமாக இருக்கும் என்று தான் இவற்றை வழக்கமாக செய்து வருகிறோம்.

அதுபோல ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் வீட்டில் உள்ள அனைவரையும் சூடம் அல்லது உப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் வைத்து சுற்றிப் போடுவதும், மற்றவரின் தீய பார்வையிலிருந்து நமது குடும்பத்தை காக்கிறது. அவ்வாறு இப்போது செய்யும் இந்த பரிகாரமும் மற்றவர்களின் பொறாமையும், தீய அதிர்வலைகளையும் உங்களிடம் இருந்து விரட்டியடிக்க வல்லது.

இதற்காக ஒரு கிராம்பை இடது கையில் எடுத்துக் கொண்டு, அதனை இருக்கமாக மூடிக்கொண்டு, யாரை சுற்றி போட வேண்டுமோ அவர்களை கிழக்கு திசை நோக்கி நிற்க வைக்க வேண்டும். பின்னர் அவர்களின் மீது இடது புறம் மூன்று சுற்றும், வலதுபுறம் மூன்று சுற்றும் மற்றும், தலையில் இருந்து கால் வரை மூன்று இறக்கம் இறக்கியும் விட வேண்டும்.

பின்னர் சுற்றி போட்ட இந்த கிராம்பை நீங்கள் வழக்கம்போல உப்பு, காய்ந்த மிளகாய் சுற்றிப் போட்டு, அதனை நெருப்பில் எரிக்கும் பொழுது, அதனுடன் சேர்த்து இந்த கிராம்பையும் எரித்துவிட வேண்டும். இவ்வாறு 9 ஞாயிற்றுக் கிழமைகள் தொடர்ந்து செய்துவர உங்களிடம் இருக்கும் எதிரிகளின் தீய பார்வைகள் முழுவதுமாக அழிந்துவிடும். மீண்டும் உங்கள் எதிரிகள் உங்களை நெருங்காமல் இருப்பார்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts