பிந்திய செய்திகள்

இனிமேல் யார் வீட்டு விசேஷத்தையும் தவிர்க்க மாட்டீர்கள்

நமது வீடு சுபிட்சமாக இருக்க பெண்கள் பல வழிமுறைகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறு வாரம் ஒருமுறை சிறப்பு பூஜை செய்வதும், தினமும் காலை மற்றும் மாலை விளக்கேற்றி அம்மனை வழிபடுவது, இவ்வாறு பூஜைகள் பல செய்து நமது வீட்டையும், குடும்பத்தையும் சுபிட்சமாக வைத்திருக்கின்றனர்.

அதிர்ஷ்டம் என்பது உங்களைத் தேடி வர மற்றவர்களிடமிருந்து இந்த பொருட்கள் உங்கள் கைக்கு கிடைத்தால் உடனே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் சுபகாரியம் நிகழப்போகிறது என்று. அவ்வாறு மங்கலப் பொருட்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பூ இவ்வாறான பொருட்கள் உங்கள் கையில் வந்து சேரும் பொழுது நிச்சயம் அதிர்ஷ்டம் உண்டாகும்.

அடுத்ததாக மாவிலை, ஊசி, உப்பு இதுபோன்ற பொருட்களையும் பிறரிடமிருந்து நீங்கள் பெறும்பொழுது மங்களம் உண்டாகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு சிலர் தனது வீட்டில் மாடு குட்டி போட்டுள்ளது எனவே சீம்பால் கிடைத்தது என்று உங்களுக்கு கொடுத்தாலும், உங்கள் வீட்டின் வாசலில் பசு சாணம் மற்றும் பசு ஜலம் சிந்தினாலும் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.

அவ்வாறு உங்களுக்கு ஏதேனும் நல்லபடியான விஷயங்கள் நடக்க போகிறது என்றால் உங்கள் உறவினர்களோ, நண்பர்களோ அல்லது அக்கம்பக்கத்து வீட்டினரோ ஏதேனும் தங்கள் வீட்டில் விசேஷம் என்று உங்களை அழைக்க வருவார்கள். அதாவது பெண் பார்க்க வருகிறார்கள், நிச்சயம் நடக்கப்போகிறது, சீமந்தம் நடக்கவிருக்கிறது இவ்வாறான விசேஷங்களுக்கு நீங்களும் வரவேண்டும் என்று குங்குமம் கொடுத்து உங்களை அழைப்பார்கள்.

இவ்வாறு ஒருவர் கையிலிருந்து மங்களகரமான குங்குமம் உங்களுக்கு வரும் பொழுது நிச்சயம் உங்களைத் தேடி நல்ல செய்தியும் வரும். அதுபோல நீங்கள் செல்லும் விசேஷங்களில் பலவித மங்களப்பொருட்கள் வைத்திருப்பார்கள். நிச்சயம் வீட்டில் விசேஷம் என்றால் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, பழம் இது போன்ற அனைத்து விதமான மங்களப் பொருட்களும் இருக்கும்.

இவ்வாறான மங்களகரமான பொருட்கள் இருக்கின்ற இடத்தில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும். எனவே அங்கு நாம் செல்லும் பொழுது நம்மிடமும் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். எனவே இது போன்ற விசேஷங்களுக்கு சென்று வரும் பொழுது கூடிய விரைவில் உங்களைத் தேடி உங்களுக்கான யோகமும் வந்து விடும்.

இதற்காகத்தான் நமது வழக்கத்தில் விசேஷம் முடிந்து வீட்டிற்கு செல்பவர்களுக்கு தாம்பூலப்பை கொடுக்கப்படுகிறது. அதில் வெற்றிலை, பாக்கு, தேங்காய் அல்லது பழம் இவற்றில் ஏதேனும் ஒரு சிலவற்றைக் கொடுத்து அனுப்புகின்றனர். எனவே மற்றவர் மீது இருக்கும் வெறுப்பின் காரணமாகவும், உங்களுக்கு நேரம் இல்லை என்பதை காரணமாக சொல்லியும் இனிமேல் எந்த வித விஷயத்தையும் தவிர்த்து விடாதீர்கள். நீங்கள் எந்தவிதமான சூழ்நிலையில் உங்கள் மனதை செலுத்துகிறார்களோ அதே சூழ்நிலைதான் நமது வீட்டிலும் நிலவிக் கொண்டிருக்கும். எனவே அதிர்ஷ்டம் நிறைந்த இதுபோன்ற இடங்களுக்குச் சென்றுவர நீங்களும் அதிர்ஷ்டசாலிகளாக மாறி விடுவீர்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts