பிந்திய செய்திகள்

1 பூவை மட்டும் ஒரு உருளியில் போட்டு வைத்தால் போதும். உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வருவது குறையும்.

வீட்டில் இருக்கும் நிம்மதி நிலைகுலைந்து போகும். சில பேர் வீடுகளில் தூங்கும் நேரத்தை போக மத்த நேரத்தில், காச்சு மூச்சுன்னு கத்துற சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். சதா சண்டை சண்டை என்று இருக்கும். வீட்டில் சமாதானமும் சாந்தமும் நிலையாக இருக்க அருமையான ஒரு பரிகாரம். சுலபமான ஒரு பரிகாரம். உங்க வீட்ல சண்டையாகவே இருந்தா இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். எங்க வீடு எப்போதும் அமைதியாக தான் இருக்கும். ஆனால் இவங்க வந்துட்டு போன மட்டும் வீடு ரணகளம் ஆயிரம், அப்படி என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

ஒரு உருளி எடுத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக மண்ணால் செய்யப்பட்ட உருளி அல்லது செம்பால் செய்யப்பட்ட உருளை மிகச்சிறப்பு. இல்லை என்றால் பித்தளை ஊருளியே போதுமானது. அதில் சுத்தமான நல்ல தண்ணீரை ஊற்றி உங்கள் வீட்டில் இருக்கும் எந்த பூக்களை வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளலாம். எந்த இலைகளை வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்ளலாம். ஆனால் அதில் கட்டாயம் ஒரு செம்பருத்திப்பூ இருக்கவேண்டும்.

சிவப்பு நிற செம்பருத்தி பூ. நிறைய சிவப்பு நிற செம்பருத்திப்பூ உங்களுக்கு கிடைக்கும் என்றால் நிறைய சிவப்பு நிற செம்பருத்தி பூக்களை அந்த தண்ணீரில் போட்டு அழகு படுத்திக் கொள்ளுங்கள். இதை எந்த இடத்தில் வைக்க வேண்டும். நீங்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் உங்களுடைய கண்கள் எங்கே படுகிறதோ அந்த இடத்தில் வைக்க வேண்டும்.

அதாவது வீட்டிற்குள், நுழைபவர்கள் நுழைந்த உடனேயே இந்த உருளியையும் அதில் உள்ள பூக்களையும் தான் பார்க்க வேண்டும். அப்போது அவர்களுடைய கண்ணில் இருக்கக்கூடிய கண் திருஷ்டியும், வயிற்றெரிச்சல் ஆன பொறாமை குணம் கொண்ட பார்வையும், அந்த பூவின் மீதும் தண்ணீரின் மீதும் விழும். இந்தப் பூவையும் தண்ணீரையும் பார்த்து விட்டால் போதும். அவர்களுடைய எதிர்மறை ஆற்றல் அனைத்தையும் அந்த பொருள் ஈர்த்துக்கொள்ளும்.

அதன் பின்பு அவர்கள் உங்களுடைய வீட்டை சுற்றி சுற்றி பார்த்து, உங்களை சுற்றி சுற்றி பார்த்து பொறாமையோடு எந்த கெட்ட எண்ணத்தோடு இருந்தாலும் அது உங்களை தாக்காது. இந்த ஒரு காரணத்திற்காக தான் யார் மீதும் எந்த பொருள் மீதும் திருஷ்டி படக்கூடாது என்பதற்காக பெரிய பெரிய ஹோட்டல்கள், துணிக் கடைகள், பெரிய பெரிய பங்களா வீடுகளில் இந்த ஒரு உருளி வரவேற்பறையில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்படுகிறது.

பூக்கள் வாடிய பின்பு தண்ணீரையும் பூவையும் மாற்றினால் போதும். தினசரி பூக்களை மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்கள் வீட்டில் நிம்மதி நிலையாக இருக்க வேண்டுமென்றால் இந்த சின்ன பரிகாரத்தை செய்து தான் பாருங்களேன். நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts