பிந்திய செய்திகள்

உங்கள் வீட்டில் ஆடைஅணிகலன்கள் அதிகரிக்க இதை செய்யுங்கள்

குடும்பத்தில் வறுமை இல்லாத வாழ்வும், ஆடை, ஆபரணங்கள் அதிகரிக்கவும் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் ஆண்களை விட, பெண்கள் அதிகம் விரும்பும் ஆடை, ஆபரணங்கள் சேர்வதற்கு வீட்டில் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ஆடை, அணிகலன்கள் சேர்வதற்கு லட்சுமி குபேரரை வழிபடுவது நன்மைகளைத் தரும். வியாழன் கிழமை தோறும் லக்ஷ்மி குபேர வழிபாடு செய்து வருபவர்களுக்கு ஆடை, அணிகலன்கள் குறைவில்லாமல் சேரும் என்பது நியதி. மகாலட்சுமி வாசம் செய்யும் நெல்லிக்காயில் குபேர பகவானின் அருள் இருக்கிறது. எனவே லட்சுமி குபேர படத்தை வைத்து, நெல்லிக்கனி நைவேத்தியம் படைத்து, நாணயங்களையும் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த உழைத்த பணத்தில் இருந்து ஒரு சிறு தொகையையும் வைத்து மனதார வழிபாடு செய்து வந்தால் மென்மேலும் ஆடை, அணிகலன்கள் பெருகும் என்பது நம்பிக்கை.

சில பிரசித்தி பெற்ற கோவில்களில் சண்டிகேஸ்வரர் வழிபாடு செய்வது ரொம்பவே விசேஷமானதாக கருதப்படுகிறது. சண்டிகேஸ்வர வழிபாட்டின் பொழுது உங்கள் ஆடையிலிருந்து ஒரு நூலை எடுத்து அவர் மீது வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் வர சொல்லுவார்கள். தியானத்தில் இருக்கும் சண்டிகேஸ்வரரை எழுப்பினால் நமக்கு பாவங்கள் வந்து சேரும் எனவே மெதுவாக சத்தம் எழுப்பாமல் மனதிற்குள்ளேயே வேண்டிக் கொண்டு போகும் பொழுது விரல்களால் சொடக்கு போட்டு போக சொல்லுவார்கள். இவ்வாறு செய்ய நம் மனதிலிருக்கும் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

ஆடைகள் அதிகரிக்க ஆடையில் இருந்து ஒரு சிறு நூலை மட்டும் பிரித்து அதை ஒரு சிகப்பு துணியில் வைத்து அதனுடன் கொஞ்சம் பச்சை கற்பூரம் வைத்து இறுக்கமாக முடிந்து பணம் அல்லது ஆடைகள் வைக்கும் இடத்தில் நீங்கள் வைத்து விட்டால் ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும்.

ஆடை, ஆபரணங்கள் பெருக வயதான தம்பதியினருக்கு, பெற்றோர்களால் கைவிடப்பட்ட தம்பதியினருக்கு நீங்கள் வஸ்திர தானம் செய்து வருவதும் சிறப்பான வழிமுறையாகும். பிறந்த நாள், விசேஷம் போன்ற நல்ல நாட்களில் உங்களுக்கு உகந்த நட்சத்திரத்தில் நீங்கள் வஸ்திர தானம் செய்து வர ஆடைகள் அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆடைகளிலும் தோஷங்கள் உண்டு எனவே நீங்கள் புதிதாக ஆடை வாங்கும் பொழுது கட்டாயம் அதை ஒரு முறை தண்ணீரில் அலசி விட்டு பின்னர் பயன்படுத்துவது நல்லது. அப்படி பயன்படுத்தும் பொழுதும் நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவிக் கொள்வது நல்லது.

புதிய வஸ்திரம் வாங்கும் பொழுது எப்பொழுதும் நம் முன்னோர்கள் மஞ்சள் வைத்து வழிபட்ட பின்பே அணிவது வழக்கம். இது ஆடை தோஷத்தை போக்கும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஆகும் எனவே புதியதாக ஆடை வாங்குபவர்கள், வஸ்திர தோஷம் நீக்குவது போன்ற விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது ஆடை, அணிகலன்கள் மென்மேலும் சேர்வதற்கு நல்ல வழிகளாகும். ‘ஆள் பாதி ஆடை பாதி’ என்று கூறுவது போல நாம் அணியும் ஆடையும் நம்மை உயர்த்திக் காட்டுகிறது எனவே நல்ல உடைகளை உடுத்தி, மனதார நல்ல விஷயங்களை நினைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபட்டால் நன்மைகள் நடக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts