பிந்திய செய்திகள்

ஏழு வாரங்கள் தொடர்ந்து விநாயகருக்கு இந்த பரிகாரத்தை
செய்து வர நினைத்தது நடக்கும்

நமது வாழ்வில் முக்கியமாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நல்ல வேலை, நல்ல வாழ்க்கை துணை இவை அமைவதற்கும், தொழிலில் லாபம் பெறுவதற்கும், குழந்தைகளின் பள்ளி படிப்பிற்கும் இப்படி பலவித தேவைகளுக்காக நாம் பல வகைகளில் முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்த காரியம் நடைபெற்றால் நமது வாழ்க்கையே மாறிவிடும் என்ற கனவில் இருப்போம். ஆனால் அவை நடைபெறாமல் ஏதேனும் ஒரு தடங்கள் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். இந்த தடங்கல்கள் விலகி, நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற விநாயகருக்கு இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் தான் நினைக்கின்ற அனைத்தும் நடந்து விட்டால் வாழ்க்கை என்பது இன்பமாக மாறி விடும். ஆனால் கர்மா என்பது நாம் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் நமக்கு எந்த நேரத்தில் எது நடக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது. அப்படி உங்களுக்கு ஒரு விஷயம் நடக்க வேண்டுமென்றால் அதற்கான நேரம் வந்த பிறகு தான் அது வெற்றியாக மாறும்.

இப்படி ஒருவரின் வாழ்க்கையில் மாற்றம் வர வேண்டும், அதிலும் நாம் நினைக்கின்ற நேரத்தில் வர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் நமது கர்மாக்களின் தீவிரம் அனைத்தும் குறைந்து நமக்கான நல்ல காலம் வர வேண்டும். அதற்கு வினைகளைத் தீர்க்கும் விநாயகரை வணங்கி வர நல்ல பலன் கிடைக்கும். எனவே விநாயகருக்கு இந்த பரிகாரத்தை மட்டும் தவறாமல் செய்து வாருங்கள்.

இந்த பரிகாரத்தை சனிக்கிழமை தோறும் தொடர்ந்து ஏழு சனிக்கிழமைகள் செய்ய வேண்டும். அதற்கு எப்பொழுதும் போல வெள்ளிக்கிழமை அன்று மறுநாள் பூஜைக்கான அனைத்து விஷயங்களையும் தயார் செய்ய வேண்டும். அதாவது பூஜை பாத்திரங்களை பூஜை செய்வதற்கு ஏற்றவாறு சுத்தம் செய்து மஞ்சள், குங்கும பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

மறுநாள் காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, இந்த பூஜையை காலை 8 மணிக்குள் செய்திட வேண்டும். எப்போதும் போல விளக்கு ஏற்றி, தீபாராதனை காண்பிக்க வேண்டும். பிறகு பூஜை அறையில் ஒரு சிறிய பானையில் தண்ணீர் ததும்பாத வண்ணம் முழுவதுமாக தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். பின்னர் அதில் அருகம்புல்லை மூழ்குமாறு இட வேண்டும்.

அந்த நீரையும், எலுமிச்சை பழத்தையும் உங்கள் வீட்டு வாசலில் விநாயகர் சிலை இருந்தால் அதற்கு வைத்து அபிஷேகம் செய்யலாம். அல்லது வீட்டிற்கு அருகில் உள்ள அரச மரத்தடி விநாயகருக்கு அபிஷேகம் செய்யவேண்டும். பின்னர் ஒரு எலுமிச்சை பழத்தை விநாயகரின் பாதத்தில் வைத்து மனதார வேண்டிக்கொண்டு, ஒரு எலுமிச்சை பழத்தை மட்டும் வீட்டிற்கு கொண்டு வந்து, வீட்டின் வாசலில் கட்டி வைக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து ஏழு வாரங்கள் செய்து வர நினைத்த காரியம் நிச்சயம் நடைபெறும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts