பிந்திய செய்திகள்

இன்று பங்குனி செவ்வாய்! முருகனுக்கு இந்த 1 பொருளால் அபிஷேகம் செய்தால் வந்த துன்பம் நீங்கும்

பிலவ வருடத்தின் கடைசி மாதமான பங்குனி மாதம் தொடங்க இருக்கும் இந்த நாள் செவ்வாய்க்கிழமை உடன் கூடிய இந்த பங்குனி முதல் நாள் ரொம்பவே விசேஷமானது. குறிப்பாக முருகனை வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் அப்படியே கிடைக்கும் என்கிற நம்பிக்கை உண்டு. பங்குனி செவ்வாய்க்கிழமையில் முருகனுக்கு செய்ய வேண்டிய அபிஷேகம் என்ன? அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

ஆண்டின் இறுதி மாதமாக இருக்கும் இந்த பங்குனி மாதத்தின் துவக்கம் முருகனுக்கு உகந்த செவ்வாய்க் கிழமையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பங்குனி செவ்வாயில் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருபவர்களுக்கு நீண்ட நாள் வேண்டுதல் கூட விரைவாக நிறைவேறி விடும் என்பது நம்பிக்கை. பல வருடங்களாக குழந்தை பேறுக்காக வேண்டி காத்திருப்பவர்கள், எப்படியாவது சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்று தவம் இருப்பவர்கள், விரும்பிய வேலை கிடைக்க, விரும்பிய தொழிலை செய்ய இப்படி நீங்கள் நீண்ட நாட்களாக, நீண்ட வருடங்களாக நிறைவேறாதா? என்று நினைக்கும் விஷயங்கள் கூட நிறைவேறக் கூடிய அற்புதமான நாள் தான் பங்குனி செவ்வாய்!

இந்நாளில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி விபூதி பூசிக் கொள்ளுங்கள். பூஜை அறையை சுத்தம் செய்வது மாக்கோலம் இடுவது போன்ற அலங்காரங்களை செய்து முடித்த பின்பு முருகன் படம் மற்றும் முருகனுடைய வேல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். முருகனுடைய விக்ரஹம் சிறிய அளவில் எப்பொழுதும் வாங்கி வைத்திருப்பது விசேஷமானது. முருகனுடைய சிலைக்கும், முருகனுடைய வேலுக்கும் முதலில் சாதாரண தண்ணீரால் அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு விபூதி, தயிர், பால், பன்னீர், இளநீர், குங்குமம், சந்தனம், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யலாம். முக்கியமாக பால் அபிஷேகம் செய்து முருகனை வழிபடுபவர்களுக்கு கட்டாயம் வயிற்றில் பால் வார்க்கும் நல்ல செய்திகளை வாரி வழங்குவார் முருகன் என்பது ஐதீகம்.

மேலும் இந்நாளில் உணவேதும் உண்ணாமல் உப்பில்லாத உணவை பிரசாதமாகப் படைத்து வழிபடுவார்கள். வெண்பொங்கல், கலவை சாதங்கள் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். இன்றைய நாள் முழுவதும் சாப்பாட்டில் உப்பு இல்லாமல் மற்றும் முழு நேர விரதம் இருந்து வழிபடலாம். அப்படி இருக்க முடியாதவர்கள் பால், பழச்சாறு போன்ற திரவ பொருட்கள் மற்றும் பழங்கள் போன்றவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

முருகன் கவசம் படிப்பது, முருக மந்திரங்களை உச்சரிப்பது இன்றைய நாளில் ரொம்ப விசேஷமானதாக கருதப்படுகிறது. மேலும் சிவனை இக்காலத்தில் வேண்டி வணங்குபவர்களுக்கு நல்லாசி அருள்வார். முருகனுக்கு மணமிக்க வாசனை மலர்களால் அர்ச்சனை செய்வதும் ரொம்பவே சிறப்பானதாக கருதப்படுகிறது.

இந்நாளில் வீட்டிலிருந்து விரதம் செய்தாலும், முருகன் கோவிலுக்கு சென்று அங்குள்ள முருகனை தரிசனம் செய்து வழிபட்டு வருபவர்களுக்கு முழு பலன்களும் கிடைக்கும். முருகனுக்கு அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது ரொம்பவே சிறப்பு எனவே சுத்தமான புதிய அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வையுங்கள். பின்னர் உங்களுடைய பிரார்த்தனைகளை வைத்தால் நிச்சயம் முருகன் அதனை விரைவாக தீர்த்து வைப்பார் என்பது பக்தர்களிடையே ஒரு ஆழமான கருத்து வேரூன்றியிருக்கிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts