பிந்திய செய்திகள்

தவறியும் இந்த பொருட்களை, மற்றவர்களிடமிருந்து நீங்கள் தானமாக வாங்க கூடாது

நம்முடைய வாழ்க்கையில் எதேர்ச்சையாக நடக்கக்கூடிய ஒரு விஷயம் இனாமாக கிடைக்கின்றது, பணம் கொடுக்காமல் கிடைக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக, யார் எதைக் கொடுத்தாலும் வாங்கி நம் வீட்டிற்குள் வைத்துக் கொள்ளக் கூடாது. முதலில் நமக்கு சொந்தமில்லாத பணமாக இருந்தாலும் சரி, இலவசமாக வரக்கூடிய எந்த பொருளாக இருந்தாலும் சரி, உழைக்காமல் நம் கைக்கு வரக்கூடிய பொருள் நமக்கு சொந்தமில்லை. அதன்மூலம் நமக்கு லாபம் வருகிறதோ இல்லையோ, நிச்சயமாக நஷ்டம் வரும்.

உழைக்காமல் சம்பாதித்த காசு, இனாமாக வரும் பொருள், எதுவாக இருந்தாலும் முதலில் அதை வேண்டாம் என்று சொல்லி, நிராகரிக்க கற்றுக்கொள்ளுங்கள். காசு கொடுக்காமல் கிடைக்கின்றது என்பதற்காக, எது கிடைத்தாலும் வாங்கி வீட்டிற்குள் வைத்துக் கொள்பவர்களுக்கு கஷ்டமும் இனாமாக வரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த வரிசையில் யாரிடமிருந்தும் எவர்சில்வர் பாத்திரங்களை இனமாக வாங்கக்கூடாது. அதாவது எவர்சில்வர் பாத்திரங்களில் இரும்பு உலோகமும் கலக்கப்பட்டுள்ளது. இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை ஒருவரிடமிருந்து மற்றவர் கையில் பெற்றுக் கொண்டால், தானம் கொடுத்தவர்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டமும், துரதிஷ்டமும் நம்மிடம் ஒட்டிக்கொள்ளும் என்ற ஒரு கருத்து உண்டு. அந்த காலத்தில் பாட்டிமார்கள் சொல்வார்கள்! ‘இரும்பு சம்பந்தப்பட்ட கனமான பொருட்களைக் கையில் கொடுக்காதே! கையில் வாங்காதே! என்று சொல்லுவார்கள்.’

சரி, இலவசம் தானம் இதை இரண்டையும் தாண்டி, அன்பளிப்பு என்ற ஒரு விஷயம் உள்ளதே! பாசமாக நமக்கு அன்பளிப்பாக கொடுக்கக்கூடிய எவர்சில்வர் பாத்திரங்களை என்ன செய்வது? என்ற சந்தேகம் இப்போது எல்லோருக்கும் எழும். நாகரீகம் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் திருமணங்களுக்கும், திருமணங்களில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கும், வருகை தருபவர்களுக்கு எவர்சில்வர் பாத்திரங்களை அன்பளிப்பாக கொடுக்கின்றார்கள்.

இந்த எவர்சில்வர் பாத்திரங்களை என்ன செய்வது? நம் கையால் கட்டாயம் பெற்றுக்கொண்டு தானே ஆகவேண்டும். சரி, நாம் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் மொய் வைக்கும் பழக்கத்தை வைத்து வருகின்றோம். மொய் வைத்துவிட்டு அதன் பின்பு, அவர்கள் கொடுக்கும் அன்பளிப்பை வாங்கி வரும் பட்சத்தில், அதை நீங்கள் இனமாக வாங்கிய கணக்கில் சேராது.

இருந்தாலும், உங்களுடைய வீட்டு விசேஷங்களில் உங்கள் வீட்டு சுப காரியங்களில், இனி எவர்சில்வர் பாத்திரத்தை அன்பளிப்பாக கொடுப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது. விசேஷங்கள் சுபநிகழ்ச்சிகள் என்றாலே வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் மட்டை தேங்காயை தானமாக கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது சாஸ்திரம். முடிந்தவரை இதை பின்பற்றும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். நம் வீட்டில் நடக்கும் சுபகாரியங்கள் சுகமாகவே முடிவதற்கு, இந்த மங்களகரமான பொருட்களை தானம் கொடுப்பது நமக்கு பல நன்மைகளை கொடுக்கும்.

அடுத்தபடியாக, இரும்பு சம்பந்தப்பட்ட கத்தி, அருவாமனை, காய்கறிகள் வெட்ட பயன்படுத்தும் எந்திரங்கள், இப்படிப்பட்ட பொருட்களை யாருக்கும் நீங்கள் தானமாகவும் கொடுக்கக்கூடாது. அன்பளிப்பாகவும் கொடுக்க வேண்டாம். தானமாகவும் பெறக்கூடாது.

நிறைய வீடுகளில் இந்த தவறு நடக்கின்றது. அதாவது சில பேர் கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்வார்கள். அப்படி இருக்கும் போது, தன்னுடைய தாய் வீட்டில் இருந்தோ அல்லது தன்னுடைய மாமியார் வீட்டில் இருந்தோ மட்டும்தான் தனி குடிதனத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்ல வேண்டுமே தவிர, மற்ற உறவினர்களிடத்திலிருந்து, அவர்கள் வீட்டில் புழங்கிய பாத்திரங்களை அல்லது புழங்காத புது பாத்திரமாக இருந்தாலும் சரி அதை நம்முடைய வீட்டிற்கு எடுத்துச் செல்லவும் கூடாது.

நிறைய பேர் அனுபவத்தில் உணர்ந்திருப்பார்கள். அடுத்தவர்கள் வீட்டிலிருந்து ஏதாவது ஒரு பொருளை நம் வீட்டிற்கு கொண்டு வந்து இருப்போம். அந்த பொருள் வந்த பின்புதான், நம்முடைய வீட்டில் ஏதோ ஒன்று தவறாக நடக்கின்றது, ஏதோ ஒன்று சரியில்லை! என்ற உணர்வு நம் ஆழ்மனதில் இருந்து கொண்டே இருக்கும். அந்த வரிசையில் தான் இந்த எவர்சில்வர் பாத்திரங்களும் அடங்கும். நம்பிக்கை உள்ளவர்களுக்காக மட்டுமே சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் இது. நம்பிக்கை இல்லாதவர்கள் பின்பற்ற வேண்டுமென்று அவசியமில்லை.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts