பிந்திய செய்திகள்

வீட்டில் எதிர்மறை சக்தி இருப்பதை எலுமிச்சை பழத்தை கொண்டு தெரிந்து கொள்ளலாம்

வீட்டில் எதிர்மறை சக்தி இருப்பதை எலுமிச்சை வீடு என்பது வெறும் செங்கல், சிமெண்டால் ஆனது அல்ல. நாம் அந்த வீட்டில் நுழையும் போது நமக்கான நிம்மதியையும், பாதுகாப்பையும் தரக்கூடியது தான் நாம் ஒவ்வொருவரும் வசிக்கக்கூடிய வீடு. அப்படிப்பட்ட வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை வெறும் 10 ரூபாய் செலவில் எலுமிச்சைப் பழத்தை வைத்து எப்படி தெரிந்து கொள்வது. வீட்டிலிருந்து எதிர்மறை சக்திகளை வெளியேற்றி நிம்மதி அடையலாம்.
எதிர்மறை சக்திகள் என்ன செய்யும்?

ஒரு வீட்டில் நேர்மறை அதிர்வுகளும், தெய்வங்களும் குடி கொண்டு சுபத்துவத்துடன் இருக்கும் போது நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலிலும் அருமையான வெற்றியையும் மன நிறைவு, நிம்மதி தரும். ஆனால் சிலர் வீட்டில் அப்படி இல்லாமல் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருப்பின், அந்த வீட்டில் வசிக்கக்கூடியவர்களுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுதல் மற்றும் அவர்களின் உறவில் பல்வேறு கருத்து வேறுபாடு, பிரச்னைகள் ஏற்படத் தொடங்கும். இப்படி வீட்டில் மோசமான பலன்களைத் தரக்கூடிய எதிர்மறை சக்திகள் உள்ளது என்பதை மூன்று பச்சை எலுமிச்சை பழங்களை வைத்து நாம் உறுதி செய்ய முடியும். அதே போல எலுமிச்சை பழங்களை வைத்து நாம் எதிர்மறை ஆற்றலை நீக்கி எப்படி வளமும் பெறலாம்.

எதிர்மறை சக்தியை அறிந்து கொள்வது எப்படி?

நாம் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது எப்போதும் ஒரு பச்சை எலுமிச்சையை உங்கள் பையில் வைத்து எடுத்துச் செல்லுங்கள். மீண்டும் வீட்டுக்கு வந்து அந்த எலுமிச்சையைப் பார்க்கும் போது அது நன்கு காய்ந்திருப்பின் , உங்களை நோக்கி அதிக எதிர்மறை சக்திகள் வந்துள்ளதை உணரலாம். உடனே அதை தூக்கி எரிந்துவிடவும்.

வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை அறிந்து கொள்ளவும், அதை வெளியேற்றவும். ஒரு எலுமிச்சைப் பழத்தை 4 பகுதியாக அறுத்து அதை உப்பு பரப்பிய ஒரு தட்டின் நடுவே வைக்க வேண்டும். இதனை உங்களின் கட்டிலுக்கு அடியில் வைக்கவும். மறுநாள் அந்த எலுமிச்சையையும், உப்பையும் உங்களின் கைகளால் தொடாமல் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு தூக்கி எறிந்து விடுங்கள். இப்படி செய்வதால் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் விலகி வீட்டில் சுபிட்சம் ஏற்படும்.

கெட்ட சக்திகள் நீக்கும் எலுமிச்சை

மூன்று எலுமிச்சைப் பழங்களை எடுத்துக் கொண்டு அதை இரண்டாக வெட்டி நம் வீட்டின் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும். அப்படி வைத்த எலுமிச்சை பழங்கள் மஞ்சளாகவோ அல்லது கருமையாக மாறினால் அதனை உடனே தூக்கி எறிந்துவிட்டு. அதே இடத்தில் வேறொரு புதிய எலுமிச்சையை வெட்டி வைக்க வேண்டும்.

தூய்மையான மழை நீரில் எலுமிச்சைப் பழ தோலை மட்டும் போட்டு கொதிக்க வைத்து அதை வீடு முழுவதும் தெளித்தால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் நீங்கி சுபத்துவம் ஏற்படும்.

வீட்டில் ஏதேனும் ஒரு மேஜை மீது கண்ணாடி கிண்ணம், டம்ளரில் 3 எலுமிச்சையை வைப்பதால் வீட்டில் உறவுகள் வலுப்படும்.

இந்த சகுனங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் பண வரவையும் கொண்டு வரும்
தீய சக்திகள் உங்களை நெருங்காமல் இருக்க

ஒரு பீங்கான் கூடையில் 9 எலுமிச்சை பழங்களை வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் போது ஒரு எலுமிச்சை நடுவிலும் மற்றவை எல்லாம் அதை சுற்றி இருப்பது போன்று வைக்க வேண்டும். இப்படி செய்வதால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

நாம் வேலை பார்க்கும் இடத்தில் மேஜையில் அல்லது நீங்கள் தொழில் செய்யக்கூடிய இடத்தில் உங்களின் மேஜையின் மீது மூன்று எலுமிச்சை பழத்தை எப்போதும் வைத்துக் கொள்வது நல்லது. அது காய்ந்ததும் அதை மாற்றிவிட வேண்டும். இதன் மூலம் நேர்மறை சக்தியும், செல்வத்தையும் ஈர்க்கலாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts