ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே உணவு உட்கொண்டால், உணவு கட்டுப்பாட்டை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். வழக்கமாக சாப்பிடும் அளவை விட குறைவாக சாப்பிடுவதுதான் நல்லது. அதிகமாக சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்துவிடும்.
வறுத்த உணவுகள், அதிக கலோரிகள் கொண்ட உணவுகள், ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இட்லி, தோசை சாப்பிடலாம். பாதாம், முந்திரி மற்றும் திராட்சை போன்ற உலர் பழங்களை சிற்றுண்டியாக உட்கொள்ளலாம்.
விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களுள் ஒன்று உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதாகும். விரதம் இருப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. நாள் முழுவதும் நீர்ச்சத்தை உடலில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
நார்ச்சத்து மிகுந்த உணவு பொருட்களை உட்கொள்வது நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதற்கு பதிலாக பச்சை ஆப்பிள், பூசணி மற்றும் சுரைக்காய் போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்.
அவை நாள் முழுவதும் சோர்வின்றி இருக்க உதவும்.ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவதை தவிர, தூக்க சுழற்சியை முறையாக பராமரிப்பது அவசியம். தினமும் உடல் ஓய்வெடுக்க போதுமான நேரத்தை
ஒதுக்க வேண்டும்













































