பிந்திய செய்திகள்

தலை வாசல் கதவில் இதை மட்டும் ஒருபோதும் வைக்கவே கூடாது!!!

சில பேர் வாடகை வீட்டில் வாழ்ந்திருந்தாலும் நிம்மதியான சந்தோஷமான, பண கஷ்டம் இல்லாத, கடன் சுமை இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து இருப்பார்கள்.கொஞ்சம் வசதி வாய்ப்புகள் வந்தவுடன், சொந்த வீடு கட்டி குடி போன பின்பு வாடகை வீட்டில் இருந்த நிம்மதியை கூட அவர்களால், சொந்த வீட்டில் பெற்றிருக்க முடியாது. இதற்கு நிறையவே காரணங்கள் இருக்கலாம். நிறைய பேருக்கு நிலை வாசல் கதவை அலங்கரிப்பது மிகவும் பிடிக்கும். வாடகை வீட்டில்தான் அலங்கார கதவு இல்லை. சொந்த வீட்டிலாவது அலங்கார நிலைவாசல் வைத்துக் கொள்ளலாமே என்று சொல்லி அந்த நிலை வாசல் கதவில் அவர்களுக்கு பிடித்த தெய்வங்களின் சிலைகளை செதுக்கி வைத்துக் கொள்வார்கள். குறிப்பாக மகாலட்சுமி, கெஜ லட்சுமி, பிள்ளையார், முருகர், அப்படி இல்லை என்றால் அவர்களுக்கு பிடித்த தெய்வங்களின் திருவுருவத்தை அந்தக் கதவில் பதித்து வைத்திருப்பார்கள்.

கதவு என்பு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆடிக்கொண்டே இருப்பது. அதை திறந்து மூடும் போது அந்த தெய்வங்களும் கதவோடு சேர்ந்து ஆட்டம் கண்டு கொண்டே தான் இருக்கும். இதனால் வீட்டில் மன கஷ்டம் சண்டை சச்சரவுகள் வரும். ஆகவே கதவில் எப்போதும் சுவாமி படங்களை செதுக்கி வைக்காதீர்கள். அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் கஜலட்சுமி படமாக இருக்கட்டும், பிள்ளையாரின் படமாக இருக்கட்டும், நிலை வாசலுக்கு மேலே உள்ள சட்டத்தில் தான் வைப்பார்களே தவிர கதவில் சுவாமி படங்களை வைத்திருக்க மாட்டார்கள்.

சுவாமி பட ஸ்டிக்கர் கூட நிலை வாசல் கதவில் ஒட்டி வைக்காதீங்க. இதற்கு பதிலாக உங்கள் நிலை வாசல் கதவை அலங்கரிக்க ஸ்வஸ்திக் சின்னம், ஓம் சின்னம், மயில், அன்னப்பறவை பூக்கள் இவைகளை வைத்து அலங்காரம் செய்து கொள்ளலாம். பசுவும் கன்றும் இருப்பது போன்ற உருவங்களை பதிக்கலாம். இவையெல்லாம் நடந்து கொண்டே இருக்கக்கூடிய விலங்குகள் தான். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரும். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது

இதைப் படித்தவுடன் நிறைய பேருக்கு சந்தேகம் வந்திருக்கும். எனக்கு தெரிந்தவர்கள் வீட்டில் வாசல் கதவில், பெருமாள் பதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குடும்பம் சந்தோஷமாக தான் உள்ளது. அவர்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள். அதை பார்த்துதான் நாங்களும் எங்களுடைய வீட்டில் பெருமாள் படத்தை கதவில் பதித்தோம் என்று நிச்சயம் கேள்வி எழுப்புவார்கள்.

எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் ஒரே மாதிரி இருக்காது. சில பேருக்கு சில விஷயங்கள் ராசியை கொடுக்கும். சில பேருக்கு சில விஷயங்கள் கஷ்டத்தை கொடுக்கும். உங்களுக்கும் உங்கள் வீட்டில் நிலை வாசலில் இப்படி சுவாமி படம் பதிந்திருப்பது ராசியாக இருந்தால் பிரச்சனை கிடையாது. ஆனால் இந்த வீட்டிற்கு வருவதற்கு முன்பு நாங்கள் நன்றாகத்தான் இருந்தோம். இந்த வீட்டிற்கு வந்தது பிறகு தான் பிரச்சனை எனும் பட்சத்தில் உங்கள் வீட்டில் வாசல் கதவில் சுவாமிகளின் திருவுருவப் படத்தைப் செதுக்கி வைத்து இருந்தால், அதில் மாற்றத்தை கொண்டு வந்து பாருங்கள். நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts