பிந்திய செய்திகள்

வெள்ளிக்கிழமை பூஜை செய்பவர்கள் சாப்பிடக்கூடாத பொருள்கள்

வெள்ளிக்கிழமையில் வீட்டில் பூஜை, புனஸ்காரங்கள் செய்வதை பெரும்பாலானோர் கடைபிடித்து வரும் ஒரு முக்கிய விசேஷமான தினமாகும். அனுதினமும் பூஜை செய்பவர்களுக்கு அனைத்து தெய்வங்களின் அனுக்கிரகமும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆனால் வெள்ளிக்கிழமை பூஜை செய்பவர்களுக்கு இல்லத்தில் மகிழ்ச்சியும், செல்வமும் அதிகரிக்கும் என்பது நியதி! அப்படி பூஜை செய்யும் பொழுது சாப்பிட கூடாத ஒரு பொருள் என்ன? அது எதனால் சாப்பிட கூடாது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

நவ கிரகங்களுக்கு உரிய தெய்வங்கள் உண்டு. அது போல நவ கிரகங்களுக்கும் ஒவ்வாத அறுசுவையும் உண்டு. அறுசுவையில் ஒரு சுவையை குறிப்பிட்ட சில நாட்களில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் பொழுது புளிப்பான பொருட்களை சாப்பிட கூடாது என்பது ஐதீகம்.

வெள்ளிக்கிழமையில் சுக்கிரன் ஆதிக்கம் செலுத்தும் கிழமையாக இருப்பதால் அன்றைய தினம் சுக்கிரனுக்கு ஒவ்வாத புளிப்பு சுவையை தவிர்க்க வேண்டும். மேலும் நெல்லிக்காய் போன்ற பொருட்களில் மகாலட்சுமியின் அம்சம் இருப்பதால் வெள்ளிக்கிழமையில் நெல்லிக்காய் சாப்பிடக் கூடாது என்பது நம்பிக்கை, எனவே நெல்லிக்காய் தொடர்பான பொருட்களை வெள்ளிக்கிழமையில் தொடாமல் இருப்பது நல்லது.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அரிசி உணவுகளை தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. ஏகாதசி விரதம் இருக்கும் பொழுது அதன் முழுமையான பலன்கள் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அரிசி உணவை தவிர்க்கின்றனர். அரிசியில் இருக்கும் ஸ்டார்ச், நம் பசியை எளிதாக போக்கக் கூடியது. வயிறு நிரம்பியது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தக் கூடிய இந்த அரிசி உணவு விரதம் இருக்கும் நாளில் தவிர்த்தால் விரதத்தின் முழு பலன்களை அடையலாம் என்பதால் தான் ஏகாதசி நாளில் அரிசி உணவு தவிர்க்கப்படுகிறது.

தகிக்கும் சூரிய கிரகத்தின் ஆற்றல் அதிகரித்து காணப்படும் ஞாயிற்றுக் கிழமையிலும் அவருக்கு ஒவ்வாத இந்த நெல்லிக்கனியை சாப்பிடக் கூடாது என்பது நம்பிக்கை. நெல்லிக்கனி, எலுமிச்சை கனி போன்றவை குளிர்ச்சி பொருந்தியது என்றாலும், இதில் இருக்கும் புளிப்பு தன்மை காரணமாக கிரகங்களின் ஆதிக்கம் ஏற்படும் என்று தவிர்க்கப்படுகிறது.

நவராத்திரியில் ஒன்பது ராத்திரிகள் ஒன்பது விதமான கலவை சாதங்கள் படைக்கப்படுகிறது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவை நிச்சயம் இருக்கும். இந்த சுவை கிரகங்களின் ஆதிக்கம் பெற்று நமக்கு நல்ல அருள் கிடைக்கும் என்பதால் இவ்வாறு படைக்கப்படுகிறது. எனவே சுவைக்கும் கிரகங்களுக்கும் சம்பந்தம் உண்டு. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் புளிப்பு சுவையை தவிர்க்க வேண்டும்.

குருவின் ஆதிக்கம் நிறைந்துள்ள இடங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் இனிப்பை அதிகமாக தங்கள் உணவில் எடுத்துக் கொள்வர். வட இந்திய மக்கள் இனிப்பை விரும்புவதற்கு காரணமும் இது தான். மலைவாழ் இடங்களில் சூரியனுடைய ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதால் இவர்கள் காரம் அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். எனவே அந்தந்த வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப கிரகங்களின் ஆதிக்கம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கு தகுந்தவாறு அங்கு விளைச்சலும், அதை விரும்பி ஏற்கும் மக்களும் இருக்கத் தான் செய்கின்றனர். வெள்ளிக் கிழமையில் புளிப்பு தவிர்த்து பாருங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும், செல்வமும் அதிகரிக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts